Header Ads



எதிர்க்கட்சி Mp க்களின் குடியுரிமைகளை ஒழிக்க சதி - இம்தியாஸ் (வீடியோ)


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்த கருத்துக்கள்,

(வீடியோ)

இன்று நாடு பல முக்கியமான சவால்களை எதிர்கொள்கிறது. ஜனநாயகம், பொதுவான சட்டம், மக்களின் இறையாண்மை, நீதித்துறையின் சுதந்திரம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சுதந்திரம் அனைத்தும் இன்று குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றன.

அரசியல் பழிவாங்கும் ஆணைக்குழுவின் அறிக்கை அடுத்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.  இந்த அறிக்கை நாட்டின் பொதுவான சட்டம், நீதித்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்றவற்றின் சுதந்திரத்திற்கு சவால் விடுக்கிறது.  கடுமையான மோசடிகளுடன் தொடர்புடைய ஊழல்களுக்கான நீதிமன்ற வழக்குகளில் இருந்து ஜனாதிபதியின் தனிப்பட்ட அபிப்பிராயத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழு அறிக்கை மூலம் விடுவிக்கப் போகிறார். இத்தகைய நடவடிக்கை சட்டமா அதிபரை சவாலுக்குட்படுத்தும் செயற்பாடாகும்.

இது நாட்டின் நீதிக் கட்டமைப்பினூடாக உச்சநீதிமன்றம், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை ரத்து செய்ய பரிந்துரைகளை செய்ய முயற்சிக்கிறது.இது நம் நாட்டின் சட்டத்திற்கும் ஒரு சுயாதீன நீதித்துறைக்கும் விடுக்கும் சவாலாகும்.அரசாங்கத்திற்கு சவால் விடும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குடிமை உரிமைகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆணைக்குழு அதன் எல்லைகளை மீறுகிறது.

அரசியலமைப்பின் சட்டங்களை உருவாக்குவது பாராளுமன்றமாகும், அதற்கு விளக்கமளிக்கும் அதிகாரம் நீதித்துறைக்கு உள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த முடிவுகள் தான் முடிவான தீர்வாகும்.உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவைத் தவிர வேறொரு தீர்ப்பு வழங்கும் சட்டக் கட்டமைப்பு இந்நாட்டில் இல்லை என சகலரும் கருதுகிறோம்.  இதற்கு மேலால் சென்று நீதிமன்ற வழக்குகளை விடுவிக்க ஆணைக்குழு முயல்கிறது.கொலை,மோசடி,

துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய வழக்குகளை அரசியல் பழிவாங்கள் என்ற போர்வையில் விடுவிக்கும் ஜனநாயக விரோத செயன்முறையில் பயனிக்கிறது.பகரமாக,

உச்சநீதிமன்றம் விசாரித்து வழக்குகள்,அதிகாரிகளை பொறுப்புக்கூற வைக்க முயல்கிறது,இறுதியில் சட்டமா அதிபரை குற்றவாளியாக்க முற்படுகிறது.இது நாட்டில் ஜனநாயகம் எதிர்கொள்ளும் கடுமையான சவால்.  

ஜெனீவாவில் எமது நாட்டிற்குள்ள  கேள்விகள் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சிவில் உரிமைகள் பற்றியவையாகும்.நமது மக்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.இது சட்டத்தின் ஆட்சியைக் கீழ்ப்படுத்தும் முயற்சி என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னால் தலைவர்களின் ஒன்றியம் ஒருமித்து கையொப்பமிட்டு  தெரிவித்துள்ளனர்.  

திணைக்களத்தின் பக்கச்சார்பற்ற தன்மையை, நீதித்துறையின் சுதந்திரத்தை புறக்கணிக்கிறகும் செயலாகும்.அரசாங்கத்தின் எதிர்கால நோக்கு இவற்றின் மூலம் புலப்படுகிறது.பிரச்சிணைகளுக்கு தீர்வுகள் இல்லாத போது அடக்குமுறையை பிரயோகிக்கிறது.மக்கள் இது குற்றித்து அவதானமாக  இருப்பதோடு இதற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும்.

சமீபத்தில், திரு.ரோனி டி மெலின் 99 ஆவது பிறந்த நாள் வாழ்த்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அங்கு சென்றார்.  இதன் போது இந் நாடு வரலற்றில் ஒரு போதும் சந்திக்காத ஓர் நிலையை இன்று சந்திப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தான் நாட்டின் கடைசி நம்பிக்கை என்றும், இந்த சூழ்நிலையிலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.  

நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சுயாதீன நீதித்துறைக்கு பாரிய  சவால்கள் மேலுந்துள்ள இன்றைய நிலை குறித்து சமூகம் விழுப்பாக இருக்கவேண்டும் என்று  கூறினார்.

No comments

Powered by Blogger.