Header Ads



சாராவை கைது செய்து தரும்படி, இன்றுவரை இந்தியாவிடம் கேட்காதது ஏன்...?


இன்று(19) பிற்பகல் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிருயெல்ல தெரிவித்த கருத்துக்கள்

சீனி மோசடியில் 1600 கோடியளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பதை நாங்கள் தெரிவிக்க முன்னர் மத்திய வங்கியே தெரிவித்து ஒப்புக் கொண்டது.நல்லாட்சியில் மத்திய வங்கி மோசடியில் ஏற்ப்பட்ட 1200 கோடி ரூபாவைப் பாதுகாக்க நல்லாட்சி அரசாங்கமே வழக்கு தொடர்ந்தது.தற்போது அந்த நிதி சட்ட ரீதியாக பாதுகாக்கப்பட்டுள்ளது.இதைப் போன்று சீனி மோசடியில் இடம் பெற்ற நிதியை மீள அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொள்ள இந்த அரசாங்கம் துரிதமாக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என வேண்டிக் கொண்டார். இந்த சீனி வரிக் குறைப்பால் கிடைத்த இலாபங்கள் நுகர்வோருக்கும் கிடைக்கவில்லை அரசாங்கத்திற்கும் கிடைக்கவில்லையாயின் அந்த பணம் எங்கே சென்றது எனக் கோள்வி எழுப்பினார்.நல்லாட்சி அரசாங்கமே வழக்கு தொடர்ந்தது போல் இந்த அரசாங்கமும் துரிதமாக வழக்கு தொடர்ந்து மோசடி மேற்கொள்ளப்ட்ட நிதியை அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.மத்திய வங்கி ஒப்புக் கொண்டதை வழக்கில்  B அறிக்கையாக பயன்படுத்த வேண்டும் என சுட்டிக் காட்டினார்.

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையில் பல சாட்சியங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதையும் விட்டு மறைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.2015 க்கு முன்னர் சஹ்ரானிற்கு சம்பளம் வழங்கியதை முதலில் ஒப்புக் கொண்டதும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமாகும். அவ்வாறு இருக்கும் போது சஹ்ரானுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது?யார் வழங்கியது? எவ்வாறு வழங்கியது? என்ற விடயங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சாட்சியமாக ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவில்லை.எவ்வாறு இது சார்ந்த சாட்சியங்கள் இல்லாமல் சட்டமா அதிபர் மேற் கொண்ட விசாரணைகளையோ நடவடிக்கைகளையோ முன்னெடுக்க முடியும்? வழக்கொன்றில் சாட்சியங்களை வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படும்.அதோ போல் தான் சாரா தொடர்பான விடயங்களையும் சாட்சியங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆணைக்குழுவில் மறைத்துள்ளனர்.சாராவை கைது செய்து தரும் படி இன்று வரை இலங்கை அரசு இந்தியாவிடம் உத்தியோகபூரவமாக கோரிக்கை விடுக்கவில்லை.சாரா தொடர்பான விடயங்களையும் அவர் இந்தியாவிலுள்ளார் என்ற சந்தேகமான விடயங்களையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களமே ஆரம்பத்தில் தெரிவித்தனர். எனவே ஆணைக்குழுவிற்கு சாட்சியங்களை வழங்காது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மறைத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

சஹ்ரானிற்குப் பின்னால் சுற்றிய நாலக சில்வாவை நாமல் குமாரவின் மைத்திரி-கோட்டா தாக்குதல் விடயத்தை வைத்து திட்டமிட்டு அவரைச் சிறைப்படுத்தினர்.நாலக சில்வாவை சஹ்ரானின் விசாரணைகளிலிருந்து குழப்புவதற்காகவும் தூரப்படுத்துவதற்காகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் செயற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.அன்று நாமல் குமாரவிற்கு ஜனாதிபதி செயலகத்தில் ஓர் பதவியும் வழங்கப்பட்டிருந்தது என மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. உண்மையில் Easter attack இந்திய நரி நாய் மோடியின் sathivelaihalai செய்த சதி காரி saaraavey saharan அல்ல

    ReplyDelete

Powered by Blogger.