Header Ads



பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டால், ஒரு பௌத்த விகாரையும் எஞ்சி இருக்காது - சாகர தேரர்


இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு, அந்த கட்சி நாட்டில் நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட்டால், அது வைரஸாக மாறிவிடலாம் என பாஹியன்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மலையகத்தின் அரசியலை இந்தியாவே கையாள்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கூட இந்தியாவே கையாண்டு வருகின்றது.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாட்டில் அரசியலில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது இந்தியாவின் அரசியல் தேவையை நிறைவேற்றும் நடவடிக்கை அல்லவா? என வினவியுள்ளார்.

அத்துடன், பாரதீய ஜனதா கட்சி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டால், துறைமுகங்கள் மாத்திரமல்ல ஒரு பௌத்த விகாரையும் எஞ்சி இருக்காது எனவும் ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.