Header Ads



வெறி கொண்ட ரசிகர்கள் மரடோனாவின் கல்லறையை உடைத்து, உடல் பாகத்தை நினைவுச் சின்னமாக்க முயற்சிக்கலாம் என அச்சம்


மரடோனாவின் கல்லறையைச் சுற்றி 200 பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட உள்ளார்கள்.

மூளையில் உருவான ஒரு இரத்தக்கட்டியை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்ட மரடோனாவுக்கு (60), அதைத் தொடர்ந்து மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார்.

அவரது மரணத்தைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், கண்ணீர் விட்டுக் கதறும் காட்சிகளை ஊடகங்களில் காண முடிந்தது.

மேலை நாடுகளில் பிரபலங்கள் உயிரிழக்கும்போது, அவர்களது உடல் பாகங்களை சேகரித்து வைக்கும் வெறி கொண்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அப்படி யாராவது மரடோனாவின் கல்லறையை உடைத்து, அவரது உடல் பாகம் எதையாவது அகற்றி, நினைவுச் சின்னமாக பாதுகாக்க முயற்சி செய்யலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஆகவே, அப்படி ஏதாவது நடந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது கல்லறையை பாதுகாக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.

ஆகவே, மரடோனாவின் கல்லறையைச் சுற்றி, பாதுகாப்புக்காக 200 பொலிசார் நிறுத்தப்பட உள்ளார்கள்.

No comments

Powered by Blogger.