மீன்களின் ஊடாக கொரோனா தொற்று பரவாது என்பதை உறுதிப்படுத்த மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டிய முன்னாள் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி இன்று -18- கருத்து வெளியிட்டுள்ளார்.
“பகிரங்க ஊடக சந்திப்பில் பச்சையாக தாம் மீனை சாப்பிட்டுக் காண்பித்த பின் மீன் விற்பனை மீண்டும் புத்துயிர் பெற்று நன்மை கிடைத்ததாக” தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியும், முன்னாள் கடற்தொழில் இராஜாங்க அமைச்சருமான திலிப் வெதஆராச்சி சமைக்காத பச்சை மீனை சாப்பிட்டுக் காண்பித்தார்.
மேலும் மீன் கொள்வனவு மற்றும் அதனை உட்கொள்வதன் ஊடாக கொரோனா வைரஸ் பரவாது என்பதை எடுத்துக் காட்டுவதற்கே தாம் அதனை செய்ததாகவும், பச்சையாக மீனை சாப்பிடுங்கள் என்ற கருத்தை தாம் கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 கருத்துரைகள்:
Amuwen kanna endu sonna
samaithu saapidungal endu artham
அமைச்சர்கள் என்பவர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக செயட்பட வேண்டும். பச்சை மீனை உண்டு காட்டுவதென்பது மக்களும் அப்படி உட்கொள்ளலாம் என்பது தான் பொருள்படும்.
Post a comment