கொரோனா தொற்றால் இலங்கைக்கு வர முடியாமல் இஸ்ரேலில் சிக்கியுள்ள இலங்கையர்கள், தம்மை விரைவில் நாட்டுக்கு அழைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மாதம் நிறைவடையும் முன்னர், தம்மை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்குமாறும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 100க்கு அதிகமான இலங்கையர்கள் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வரும் எதிர்பார்ப்பில் இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் தம்மை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுள் கர்ப்பிணிகள், இதய நோயாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், வீசா காலாவதியானவர்கள், தொழில் வீசா நிறைவுபெற்றவர்கள் என பலர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a comment