Header Ads



புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில், பிரதி அதிபராக கடமையாற்றிய நிஸாரா விடைபெற்றார்


புத்தளம் கல்வி வலயத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளுக்காக என்று பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் கடந்த 11 வருடகாலமாக பிரதி அதிபராக கடமையாற்றும் திருமதி ஏ.எஸ் நிஸாரா (SLPS 1) தனது சொந்த ஊரான குருநாகல், கல்கமுவ முன்னோடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு இடம் மாறிச் செல்வதை இட்டு எமது கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் ஆழ்ந்த கவலையையை வெளிப்படுத்தினர்.

மிகச் சிறந்த ஆளுமையான நிஸாரா ஆசிரியை அவர்கள் எப்பொழுதும் சக ஆசிரியர்கள், ஊழியர்களுடன் நெருக்கமாக பழகி எல்லோருக்கும் ஆறுதல் சொல்லும் பண்பு மிக்கவர். மேலும் மாவணர்களுக்கு மத்தியில் நன்மதிப்பை பெற்று சிறந்த முன்மாதிரியாக இருந்த  நிஸாரா ஆசிரியை, கற்பித்தல் மற்றும் நிர்வாக விடயங்களில் தனது முழுமையான பங்களிப்பை பாடசாலை நிர்வாகத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சிறந்த ஒரு ஆசிரியையின் இடமாற்றதை இட்டு பாடசாலை சமூகத்திற்கு மாத்திரமன்றி புத்தளம் கல்விச் சமூகத்திற்கும் பெரும் இலப்பாகும் என்பதில் ஐயமில்லை. 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன சூழ்நிலையை கருத்திற் கொண்டு மிகச் சிறியதாக கல்லூரியன் அதிபர் ஐ.எல் சிராஜுதீன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் புத்தளம் வலய கல்வி பணிமனையின் திட்டமிடல் பிரிவு பிரதி கல்வி பணிப்பார் அலி ஜின்னா அவர்கள் விஷேட அதிதியாக கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

மிகச் சிறந்த பல பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ள பிரதி அதிபர் நிஸாரா ஆசிரியை அவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவர்களது ஈருலக வாழ்கையையும் வெற்றிகரமாக ஆக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பகல் போசனத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட சில படங்களை வாசகர்களுடம் பகிர்ந்து கொள்கின்றோம். 


தகவல்

எம். றிஸ்கான் முஸ்தீன்

No comments

Powered by Blogger.