October 18, 2020

விழித்தெழுமா OR மீண்டும் விழுமா நம் சமூகம்..? ( பகுதி - 2 )


- Dr. Liya uddeen -

மஹல்லாக்களை மையப்படுத்திய சமூக எழுச்சியும், துறை சார் நிபுணர்களின்  உருவாக்கமும்.

# கடந்த கால கலவரங்களின் போது காவல் துறையினர் நடந்து கொண்ட விதத்தைக் கவனிக்கும் போது, பாதுகாப்புத் தரப்பிற்குள் இன்னமும் எம்மவர்களுள்  கணிசமான தொகையினர் உள் வாங்கப் படல்  வேண்டும் எனத் தோன்றியது.

# பல அப்பாவிகளை,  அனாவசியமாக அள்ளிச் சென்று உள்ளே அடைத்த போது , அவர்களை வெளியே எடுப்பதற்கு'Gகட்ஸ்' உள்ள 'லோயர்ஸு'ம், ஜட்ஜ்' களும் தேவையென உணர்ந்தோம்.

( எமது சில அடங்காப் பிராணிகளின் அட்டகாசங்களையும் மறுப்பதற்கில்லை )

# கொரோனா - ஜனாஸா விவரங்களின் போது  வைத்தியத் துறை சார்ந்த பல நிபுணர்களின் தேவை வெகுவாக  உணரப்பட்டது, குறிப்பாக  JMOs, virologists,  PHIs மற்றும் soil analysts...

 ( கொரோனா-ஜனாஸா விவகாரங்களின் போது 'ஜம் இய்யா'  இன்   நிபுணர்கள் அடங்கிய குழுவின் முயற்சி பாராட்டத்தக்கது.  எனினும் அது செவிடன் காதில் ஊதிய சங்காய்ப் போனது வேறு சங்கதி.)

#நம்மில் பலரும் விரும்பாத  பிரதேச GS தொழிலின்  செல்வாக்கையே  5000/ பங்கிடப்பட்ட போது தான்  கண்டு கொண்டோம். GS இற்கே அப்படி செல்வாக்கென்றால் DS ( ஏ.ஜி.ஏ) ஐப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

இனி விசயத்திற்கு வருவோம். இப்போது ஒன்று மட்டும் புரிகிறது,

சமூகத்தின் சகல துறை களுக்குமான துறை சார் நிபுணர்களையும், புத்தி ஜீவிகளையும், கல்வியியலாளர்களையும் , ஊடக வியலாளர்களையும் , ஊடகங்களையும் இப்போதிலிருந்தே திட்டமிட்டே உருவாக்க வேண்டியிருக்கிறது.

எத்தனையெத்தனை அவலங்கள் ?

எங்கிருந்து, எப்படி ஆரம்பிப்பது??

அடி மட்டத்திலிருந்தே ஆரம்பிப்போம்.

ஏற்கனவே இந்தக் கருத்துக்கள் முன்பு, பல அறிஞர்களால் வலியுறுத்தப் பட்டுமுள்ளன.

பள்ளிவாசல்  நிர்வாகங்களும், பாடசாலை நிர்வாகங்களும் ஏற்கனவே இவற்றை  நடைமுறைப் படுத்தியும்   வரலாம், எனினும் நாளாந்தம் எதிர் நோக்கும் சவால்களுக்கு முன்னால் இவற்றின் வினைத்திறன் சற்று குறைந்திருக்குமாயின்  சின்னதாக மீண்டும் 

ஞாபக மூட்டிக் கொள்வோம்...

மதிப்பிற்குரிய ஆசிரியப் பெருந்தகைகளே, இது உங்களின் மேலான கவனத்திற்கு,

ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒழிந்திருக்கும்  ஆற்றல்களையும், திறமைகளயும் வெளிக் கொணர்வதுடன்,  மார்க்கப் பின் புலத்துடன்  கூடிய, தவறுகளைத் தட்டிக் கேட்கும் தைரியமுள்ள,  சமூக அக்கறை கொண்ட , நாட்டை நேசிக்க ஏதுவாக அமையக்  கூடிய  நல்ல பல  கருத்துக்களை அவர்களுக்குள் விதைப்போமே...

மதிப்பிற்குரிய மஸ்ஜித் நிர்வாகிகளே இது உங்களின் மேலான கவனத்திற்கு,

ஒவ்வொரு மஹல்லாவிலும்  அறிவும், ஆற்றலுமுள்ள நல்ல பல ஆளுமைகள்

நிர்வாகத்திற்கு வெளியே இருக்கலாம், அவர்களோடு  இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் 'உப குழு' வொன்றை உருவாக்குவோம், மஹல்லாவின் ஆன்மீகம், கல்வி , பொருளாதாரம், சுகாதாரம் போன்ற சகல துறைகளுடனும் சம்பந்தப்பட்ட சகல தரவுகளையும், ஆவணப் படுத்துவோம், முடிந்தால் கணணி மயப் படுத்துவோம்.

குறிப்பிட்ட அந்தந்த  துறைகளில் உயர் கல்வியைத் தொடர முடியாமலிருப்பவர்களைக் கண்டறிந்து,  ஊக்குவிப்போம், 'Bபைத்துள் மால்' நிதியம்  ஒன்றை நிறுவி , தேவையானவர்களுக்கு நிதி உதவியையும் செய்வோம்,

 கட்டிடங்கள் கட்டுவதை அரசு பார்த்துக் கொள்ளட்டும், நாம் நம் சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்.

பொதுவாக வகுப்பிலுள்ள 'முன் வரிசைக்'  காரர்கள் கெட்டிக்காரர்கள், அவர்களைத் தட்டியும் தடவியும் விட பலரும் உள்ளனர், பாவம் அந்த Back bench காரர்கள், வகுப்பிலும் ஏச்சு, வீட்டிலும் பேச்சு, கடைசியில்  ' ரோட்டு' தான் தஞ்சம், அரவணைக்கவும் ஆளில்லை, வழிகாட்டவும் யாருமில்லை,  கவனமாகக் கையாளப்பட வேண்டியவர்கள் இவர்கள்,  தவறினால் சமூகத்திற்கே பெரும் சுமையாகவும் மாறி விடலாம்.

நாளைய தலைவர்களான எமது இளைஞர்கள் பல பிரச்சினைகளுக்குள்ளும் அகப்பட்டிக் கொண்டிருக்கிறார்கள், 

சிலர் ' ஐஸ்' இல் கரைந்தும், பலர் சதாவும் இண்ட ' நெட்டில்'  சிக்கியும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்,  இவர்களை மீட்டெடுக்கவும், நெறிப்படுத்தவும் வேண்டியுள்ளது,  கூடவே, ஆண் பிள்ளைகளைக் கல்வியின் பால் ஊக்குவிக்க புதியதொரு 'டெக்னிக்' மிக அவசரமாகத் தேவைப் படுகிறது, கல்வியியலாளர்களே முன் வாருங்கள், தாமதிப்போமாயின், இன்னும் பல சமூக சீர்கேடுகளை எதிர் நோக்க வேண்டி வரும். 

கல்விக் கூடங்களில் கற்பிப்பது ஒரு புறமிருக்க டிஸ்ஸிப் பிளினுக்குப் பொறுப்பே ஆசிரியைகள் தான்...  இன்னொரு புறம் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளிவரும் பட்டதாரி மாணவிகளுக்குப் பொறுத்தமான  துணைகளைத்  தேடி எங்கு  போவதென்று சிந்திக்க வேண்டியுள்ளது...

 தொடரும்...

பகுதி -1 👇

http://www.jaffnamuslim.com/2020/10/or.html

0 கருத்துரைகள்:

Post a comment