Header Ads



20 இனால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை - அதிகாரம் மீதான ரணிலின் மோகத்தினாலே 19 வந்தது


20ம் திருத்தச் சட்டத்தில் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் பல்வேறு நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரம் மீது கொண்ட மோகம் காரணமாகவே இந்த 19ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் பூரணமாகவே சட்ட ரீதியான நியமங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த 20ம் திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதிக்கு மித மிஞ்சிய அதிகாரங்கள் காணப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை எனவும், 78ம் ஆண்டு அரசியல் அமைப்பில் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை காட்டிலும் மிஞ்சிய அதிகாரங்கள் எதுவும் இதில் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

20ம் திருத்தச் சட்டத்தின் 4 சரத்துக்கள் தவிர்ந்த ஏனைய அனைத்தையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் ஊடாக நிறைவேற்றிக்கொள்ள முடியும் என உச்ச நீதிமன்றம் சட்ட விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கே சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் எனவும், காரணங்களைக் கூறிக் கொண்டு எதனையும் செய்யாமல் இருப்பதற்கு சட்டங்கள் இயற்றப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே 20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது எனவும், மக்களுக்கு இந்த சட்டத்தினால் நலன்கள் கிடைக்குமே தவிர பாதிப்புக்கள் கிடையாது எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரீ குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. இவன் ஒரு சமுகத்துரோகி.

    ReplyDelete

Powered by Blogger.