Header Ads



மாகாண சபைகளை தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ, தலையிடவோ முடியாது


மாகாணசபைகள் விவகாரம் என்பது இலங்கையின் உள்விவகாரம் என தெரிவித்துள்ள அமைச்சர் சரத்வீரசேகர அது குறித்து இலங்கை ஜனாதிபதியே தீர்மானிக்கவேண்டும் ஏனைய நாடுகளின் தலைவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

பாதுக்கையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் மாகாணசபைகளை தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டும் என இந்தியா அச்சுறுத்தவோ அல்லது தலையிடமுடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடையது சுதந்திரம் இறைமை மிக்க நாடு இந்தியா எங்களுடைய உள்விவகாரங்களில் தலையிடமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையிலேயே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை பல நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும் அதில் ஒன்று விடுதலைப்புலிகளிடமிருந்து ஆயுதங்களை களைவது என தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியா இதனை நிறைவேற்றவில்லை இதன் காரணமாக இந்திய இலங்கை எவ்வளவு தூரம் வலுவானது என்ற கேள்வி எழுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. இதை நேரடியாக மோடியிடமே சொல்ல எங்க மகிந்தா மாமாவுக்கு புழுத்த பயம் போல

    ReplyDelete
  2. Tough Talk. But, what will, or can, Sri Lanka do if India Insists on Sri Lanka Fulfilling her Obligations under the Indo-Sri Lanka Accord?

    ReplyDelete

Powered by Blogger.