Header Ads



இம்தியாஸின் மகனை, கலாய்த்த பிரதமர் மஹிந்த (படங்கள்)


- Anzir -


இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின், இணைப்பாளர் ஹனா சிங்கர் தலைமையிலான குழுவினர் இன்று புதன்கிழமை (30) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினர்.


இதன்போது இலங்கைக்கான தமது ஆதரவை ஐ.நா. தூதுவர் உறுதிப்படுத்தினார்.


அதேவேளை இலங்கைக்கான குழுவில், அமான் இம்தியாஸ் பாக்கீர் மரிக்காரும் இடம் பெற்றிருந்தார்.


அவர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் (Partnership and Development specialistபதவி வகின்றார் 


இந்நிலையில், அவரை இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் அறிமுகப்படுத்த தயாரான போது, ஆம் இவரை நன்றாகவே எனக்குத் தெரியுமே. இவர் இவருடைய தந்தையை விட ( பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் Mp) கொஞ்சம் உயரமாக உள்ளார் எனவும், பிரதமர் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.


இதனைக் கேட்டு அங்குள்ள சகலரும் சிரித்துள்ளனர்.


கலந்துரையாடல் முடிவில் பிரதமர் மஹிந்த ராஸபக்ஸ, அமான் இம்தியாஸுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.




No comments

Powered by Blogger.