Header Ads



ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு, ரவிதான் மைத்திரியிடம் கோரினார் - சம்பிக்க

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த ஜனநாயகத்திற்கு எதிரான ஆட்சி ஆட்சி மாற்றத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான ரவி கருணாநாயக்கவே அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் பதவியில் இருந்து நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தகவல் வெளியிட்டுள்ளார்.

சம்பிக்க ரணவக்க மோசடியாளர் என ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சம்பிக்க ரணவக்க, நான் பொறுத்து வகித்த அனைத்து நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிலைமைக்கு கொண்டு வந்தேன். குறிப்பாக மின்சார சபை உட்பட நஷ்டத்தில் இயங்கிய நிறுவனங்களை இலாபம் ஈட்டும் நிலைமைக்கு கொண்டு வந்தேன். எனக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருக்குமாயின் அதனை வெளியிடுமாறு ரவி கருணாநாயக்கவுக்கு சவால் விடுக்கின்றேன்.

பிளவுப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை மேலும் பலவீனப்படுத்தி, ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து விரட்டி விட்டு அதனை கைப்பற்றும் நடவடிக்கையிலேயே ரவி கருணாநாயக்க ஈடுபட்டுள்ளார் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.