Header Ads



ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும், இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு


அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இலங்கை கொன்சூலர் அலுவலகம் ஆகியவை நமது சக இலங்கையர்களை நாட்டிட்கு அனுப்பும் செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேச உறவுகள் அமைச்சகம், இலங்கை வெளியுறவு அமைச்சு, ஏனைய அரச திணைக்களங்களுடன் நெருக்கமாக அயராது பணியாற்றுகின்றன என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றோம்.

துரதிர்ஷ்டவசமாக, குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை சமீப காலங்களில் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. எனவே, சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் பேரில், நமது சக இலங்கையர்களை திருப்பி அனுப்ப ஒரு புதிய வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இறுதி அனுமதிக்க நாங்கள் காத்திருக்கின்றோம்.

இறுதி அனுமதி கிடைத்தவுடன், நாங்கள் இலங்கை சகோதர, சகோதரிகளை மீண்டும் நம் நாட்டுக்கு அனுப்பத் தொடங்குவோம். இலங்கைக்கு அனுப்புவதற்கான முன்னுரிமை அளவுகோல்களாக கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள், பாரதூரமான நோயினால் அவதிப்படுபவர்கள் (மருத்துவ சான்றிதழ் அவசியம் ), மற்றும் ஏனையவர்களாக தொழில் இழந்தவர்கள், ராஜினாமா செய்தவர்கள், சம்பளம் அற்ற கட்டாய விடுமுறையில் உள்ளவர்கள், காலாவதியான விசாக்கள் மற்றும் சுற்றுலா விசாக்களில் உள்ளவர்கள் அடங்குவர்.

தாய்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் இலங்கையர்கள் உங்கள் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பேணுவத்துடன் உங்களது முறைக்காக பொறுமையாக காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் . எல்லா நேரங்களிலும் எங்கள் சிறந்த சேவை மற்றும் அர்ப்பணிப்பு குறித்து நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.

மேலும், இலங்கைக்கு அனுப்பப்பட உள்ள நபர்களின் பெயர் பட்டியல்களைத் தயாரிக்க தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் போலியானது என்றும் இதில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை அறிவிப்பதுடன் உங்கள் தகவல்கள் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இலங்கை கொன்சூலர் அலுவலகத்தில் மாத்திரமே நேரடியாக தொடர்பு கொண்டு பதிவு செயுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.