June 13, 2020

இலங்கையில் வாழ்ந்த ஆதி மனிதர்கள் குறித்து, வெளியாகியுள்ள புதிய ஆராய்ச்சி முடிவுகள்


48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த ஆதி மனிதன் விலங்குகளின் எலும்புகளில் ஆயுதங்களை செய்து, அவற்றை குரங்கு மற்றும் அணில்களை வேட்டையாட பயன்படுத்தி உள்ளதாக ஆராய்ச்சி ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையர்கள் உட்பட அனுபவம் வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளது.

நோயேல் அமானோ, ஓஷான் வேடேஜ், சிரான் தெரணியகல, எம்.எம்.பத்மலால், நிமல் பெரேரா, நிகோல் பொய்வின், மைக்கல் டி பெட்றிக்லியா, பெட்றிக் ரொபடீஸ் ஆகிய ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளனர்.

ஆபிரிக்காவுக்கு வெளியில் வில் அம்பு தொழிநுட்பம் பயன்படுத்தியமைக்கான பழமையான சாட்சியம் இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் இலங்கையின் ஃபா - ஹின் லினா குகைகளில் இருந்து குரங்கு மற்றும் அணில்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றை பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த ஆராய்ச்சி முடிவில் ஆதி மனிதன் வேட்டையாடினான் என்பது தெரியவந்துள்ளது. இந்த குகையானது தெற்காசியாவில் ஹோமோ சேபியன்ஸ் மனிதர்களின் பழமையான புதைப்படிவங்கள் கிடைத்த இடமாகும்.

குகையில் கிடைத்த சில எலும்புகள் ஆயுதங்களாக காணப்பட்டுள்ளன. மழைக் காடுகளில் மிக வேகமாக பயணிக்கும் சிறிய விலங்குகளை ஆதி மனிதன் வெற்றிகரமாக வேட்டையாடி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

5 கருத்துரைகள்:

இதில் இருந்து சிங்கள பெளத்தர்கள் நன்கு விளங்கிக்கொள்ள வேண்டும் என்னவென்றால் உயிரினங்கள் ஒன்றைனொன்று சார்ந்து தான் ஆதிகாலம் தொட்டு இன்றைக்கு வரை வாழ்ந்து வருகின்றனர் உதாரணம் வில்,அம்பு மூலம் மனிதன் தனக்கு தேவையான உணவுக்காக மிருகங்களை வேட்டையாடி தங்களின் உணவுகளை நிறைவேற்றி வந்து இருக்கிறார்கள் ஆனால் தட்காலத்தில் ஆடு மாடுகளை முஸ்லிம்கள் மட்டுமே கொன்று உண்ணுகிறார்கள் என்ற கருத்தை பௌத்த மக்கள் கருதும் நிலையில் இருந்து அவர்கள் முற்றிலும் விடுபட வேண்டும்.

48 ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் சிங்க‌ள‌வ‌ர்க‌ளோ, த‌மிழ‌ர்க‌ளோ, இந்துக்க‌ளோ, கிறிஸ்த‌வ‌ர்க‌ளோ வாழ‌வில்லை.
அப்ப‌டியென்றால் அப்போது வாழ்ந்த‌ ம‌னித‌ர்க‌ள் யார்?
முத‌ல் ம‌னித‌னும் முத‌ல் முஸ்லிமுமான‌ ஆத‌ம் இற‌ங்கிய‌து வாழ்ந்த‌து இல‌ங்கையில் என்ப‌தை பைபிளும் ஹ‌தீத்க‌ளும் முஸ்லிம்க‌ளின் வ‌ர‌லாற்று குறிப்புக்க‌ளும் சொல்கின்ற‌ன‌. இத‌னை என‌து "இல‌ங்கையின் முத‌ல் பூர்வீக‌ம் முஸ்லிம்க‌ளே" என்ற‌ நூலில் விப‌ர‌மாக‌ எழுதியுள்ளேன்.
ஆத‌மின் வாரிசிக‌ளான‌ ஆதிவாசிக‌ளே இவ்வாறு 48 ஆயிர‌ம் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் வாழ்ந்த‌ முஸ்லிம்க‌ளாகும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
இத்தகைய செய்திகளை சும்மா ஒரு தகவலுக்காக தெரிந்து கொள்ளலாமே தவிர, நாம் இவரை உண்மை என்று நம்பக் கூடாது. இந்த செய்திகள் பரிணாமம் சார்ந்தவை. முஸ்லிம்களாகிய நாம் படைப்பியலை நம்புகின்றவர்கள். மனிதன் குரங்கில் இருந்து வந்ததாக நம்புகின்றவர்களே இத்தகைய தகவல்களை நம்புகின்றனர்.

விஞ்ஞானம் அடிக்கடி தவறுகளை செய்யக் கூடியது, நாம் குரானையும், ஹதீசையுமே நம்ப வேண்டும், ஆய்வுகளை. விஞ்ஞானத்தை முன்னிலைப் படுத்தி நம்பக் கூடாது. அவ்வாறு நம்புவது நம்மை நாஸ்த்தீகத்தில், இறை மறுப்பில் கொண்டு சென்று விடும் பாரிய ஆபத்து உள்ளது. அல்லாஹ் நம் அனைவரது ஈமானையும் பாதுகாப்பானாக.

விஞ்ஞானம் அடிக்கடி தவறுகளை செய்யக் கூடியது, நாம் குரானையும், ஹதீசையுமே நம்ப வேண்டும், ஆய்வுகளை. விஞ்ஞானத்தை முன்னிலைப் படுத்தி நம்பக் கூடாது. அவ்வாறு நம்புவது நம்மை நாஸ்த்தீகத்தில், இறை மறுப்பில் கொண்டு சென்று விடும் பாரிய ஆபத்து உள்ளது. அல்லாஹ் நம் அனைவரது ஈமானையும் பாதுகாப்பானாக.

ஈசனன்றி எதுவுமில்லை ; தென்னாடுடைய சிவன் எல்லாருக்கும் இறைவன். தமிழர் .. தமிழ் சித்தர் தந்த வேதம் குரான் எனும் குறள்...

Post a comment