Header Ads



பெரும் பாவங்களையும் விட, கொடியது Fake ID (போலி முகமூடிகள் வாசிக்கத் தவறாதீர்கள்)


- MI Sahir -

#அவரது ஜனாஸாவில் ஊரிலுள்ள மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அம்மனிதர் உலகில் வாழும் போது தொழுகையாளியாக, நோன்பாளியாக, மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற்றவராக வாழ்ந்தார்.

கப்றில் ஜனாஸா அடக்கப்பட்டதும், மக்கள் திருப்திகரமான மனோநிலையோடு வீடு திருப்பினர்.

ஆனால் நடந்ததோ வேறு.

அவருடைய கப்று ஒளிமயமாக அமையவில்லை. இருண்டதாகவும் நெருக்கடியாகவும் மாறியது. ஜனாஸாவை நோக்கி வானவர்கள் வருகிறார்கள். அம்மனிதர் கதறியழுகிறார். நான் உலகில் நன்மைகள்தானே செய்தேன்... ஏன் எனக்கு இந்த பயங்கரமான நிலைமையென்று கேள்வி கேட்கிறார்.

அப்போது வானவர்கள் பதிலளிக்கின்றார்கள்....நீ உலகில் வணக்கவாளியாகத்தான் வாழ்ந்தாய்... ஆனாலும் அவ்வப்போது ஒரு காரியம் செய்து வந்தாய்... அந்தப் பாவம்தான் உனக்கு இந்த நிலையை கொண்டு வந்தது என்று...

அப்போது அந்த மரணித்த மனிதன் தான் செய்த பாவத்தை உணர்ந்து கை சேதப்படுகிறான். கீறிட்டு அழுகிறான்.....

தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்த அம்மனிதன், அவசரமாக தனது போனை எடுத்து தான் இயக்கி வந்த Fake ID யை அழித்து விட்டு, யாருடைய மானத்தை முகநூலில் போக்கச் செய்தானோ அவர்களின் Messenger க்கு மன்னிப்புக் கேட்டு, குறுஞ்செய்தி அனுப்பிட்டு, அவனுடைய அரசியல் தலைவனின் தொலைபேசி இலக்கத்தையும் அழித்துவிட்டு வுழு செய்கிறான்...

அல்லாஹ்விடம் பாவமன்னிப் வேண்டியவனாக.....

#பெரும்பாவங்களையும் விட கொடியது Fake ID என்று அவனது வாய் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.....

No comments

Powered by Blogger.