Header Ads



போதுமான பணம் இல்லை, கடன் பெற வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்பட்டுள்ளோம்

(ஆர்.யசி)

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் வெளிப்படையாக கூறுவதாயின் அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு போதுமான பணம் இல்லை எனவும்  அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான பந்துல்ல குணவர்தன கூறியுள்ளார்.

அரச துறைகளை கொண்டு நடத்த சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்க்கதிக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் ஒரு உலகளாவிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் பிரதான வழிகள் முடங்கியுள்ளது.

வருமான வரி முழுமையாக நின்றுவிட்டது, மதுவரி மூலமாக அரசாங்க திறைசேரிக்கு கிடைக்கும் வருமானம் நின்றுவிட்டது,  ஏற்றுமது, இறக்குமதி மூலமாக கிடைக்கும் வரிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆகவே அரச நிதி பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகின்றது. ஏற்றுமதியில் அதிக வருமானத்தை ஈட்டிவந்த ஆடை உற்பத்தித்துறை முழுமையாக வீழ்ந்துள்ளது.

அதேபோல் சுற்றுலாத்துறை மூலமாக இலங்கைக்கு கிடைத்த வருமானம் முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது. வெளிப்படையாக கூறுவதாயின் அரசாங்கத்திடம் பணம் இல்லை.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகளை வழங்குவதில் கூட அரசாங்கம் பாரிய சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது. எனவே சர்வதேச கடன்களை பெறவேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் பணம் அச்சடிப்பது குறித்து சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றது. எனினும் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்தவர்கள்  உண்மையாக எதனை கூற முற்படுகின்றனர் என்பதில் தெளிவின்மையே ஏற்பட்டுள்ளது.

பணம் அச்சடிக்க வேண்டுமாயின் அதனை மத்திய வங்கியே கையாள வேண்டும். அவர்களுக்கே அந்த அதிகாரம் உள்ளது. மத்திய வங்கி ஆளுநரே நிதியில் கைச்சாத்திட வேண்டும்.

இந்த விடயத்தில் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பிரஜை இல்லாத ஒருவரால் இலங்கை ரூபாவில் கையொப்பம் இடப்பட்டது. அது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் காலத்தில் சிங்கபூர் பிரஜையான அர்ஜுன் மகேந்திரன் என்ற நபரை மத்திய வங்கியின் ஆளுனராக்கினர்.

அவ்வாறு அவர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட வேளையில் அவர் இலங்கையின் பிரஜையோ அல்லது இரட்டை பிரஜாவுரிமை கொண்டவரோ அல்ல. இது குறித்த நீதிமன்ற விசாரணை இன்னமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறு இருப்பினும் இப்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள அதே வேளையில் சர்வதேச கடன் இன்னொருபக்கம் எம்மை நெருக்கியுள்ளது.

இந்த ஆண்டிற்காக சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் மற்றும் வட்டியாக செலுத்தவேண்டியுள்ளது. எனவே அரசாங்கமாக நாம் அடுத்த கட்ட இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.

4 comments:

  1. கடன் கேட்பதும் பிச்சை கேட்பதும் உங்கள் வழக்கமான செயல்பாடாச்சே. அது பற்றி எமக்கு அக்கறையில்லை. ஏற்கனவே நாட்டு மக்களிடமிருந்து கொள்ளையடித்து கோடான கோடி பணத்தின் ஒரு சிறிய தொகையை திருப்பிச் செலுத்தினால் பிரச்னைகளை அப்படியே முடிவுக்குக் கொண்டுவரலாம்.

    ReplyDelete
  2. 2005to 2015 robbery money bring out.then we can develop our country easily.

    ReplyDelete
  3. பெரிய பொருளாதார சூரி இப்படி செல்லலாமா பேரிய பேரிய கதையெல்லாம் சொன்னீர்களே

    ReplyDelete
  4. இது உலகளாவிய ரீதியில் கொடூர ஆட்சியாளர்களுக்கு அல்லாஹ் வைத்த ஆப்பு.

    ReplyDelete

Powered by Blogger.