Header Ads



ஜனாசாக்களை எரிக்கும் விடயங்களால் முஸ்லிம்கள் கலக்கமும், கவலையும் அடைந்துள்ளனர் -அதாஉல்லா

- ஜே.எம்.வஸீர் -

பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுப்போர் அரச இயந்திரத்தைச் சீரழித்துள்ள அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க ஆதரவு வழங்க வேண்டுமென தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம் அதாஉல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு வாசல் தொலைக்காட்சி "நெம்புகை"நிகழ்ச்சியில் இன்று (08) கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் தெரிவித்ததாவது;

கொரோனா வைரஸின் பாதிப்புக்கள் பாராளுமன்றத் தேர்தலை நடத்த இடம் தருமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் ஜனாசாக்களை எரிக்கும் விடயங்களால் முஸ்லிம்கள் கலக்கமும் கவலையும் அடைந்துள்ளனர்.மத விழுமியங்களுக்கு மதிப்பளிக்காது செயற்படுவதற்கு சில அரசியல்வாதிகள் மறைமுகமாகச் செயற்படுவதாகவே இதைக் கருத வேண்டும்.சர்வதேச நாடுகளில் கூட ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்படுகையில் எமது நாட்டில் மாத்திரம் இது திட்டமிட்டு தடுக்கப்படுகிறது.

எனவே ஜனாதிபதி,பிரதமர் ஆகியோர் அவசரமாக இதில் கவனம் செலுத்தி முஸ்லிம்களின் மத விழுமியங்களைக் கௌரவிக்க வேண்டும். பாராளுமன்றம் இல்லாது நாடு இயங்கும் நிலை தொடர்ந்தும் ஏற்படின் அரசியலமைப்பை மீறும் செயலாகவே அமையப் போகிறது.இதைக் கருத்திற் கொண்டே பழைய பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது.

எஞ்சியுள்ள மூன்று மாதங்களுக்கு (ஆகஸ்ட் ) வரை பாராளுமன்றம் இயங்குவதால் எதையும் சாதிக்கச் சாத்தியமில்லை. கொரோனா வைரஸை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளுக்கு இக்கால அளவு போதுமானதாகவும் இருக்காது.நாட்டையும் மக்களையும் கொடிய நோயிலிருந்து மீட்டெடுப்பதே,தேர்தலை விடவும் அத்தியவசியத் தேவையாகும்.மேலும் நிறைவேற்றதிகாரம்,நீதித்துறை,நிர்வாகத்துறையில் ஏற்பட்டுள்ள இழுபறிகள் பாராளுமன்றச் செயற்பாடுகளை பிச்சைக்காரன் சத்தியைப்போல் ஆக்கியுள்ளது.எனவே 19 ஆவது திருத்தத்தால் ஏற்பட்டுள்ள இக் குளறுபடிகளைக் களைவதற்கு பழைய பாராளுமன்றத்தைக் கூட்டி 19 ஐ ஒழிக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கு வழி  காண வேண்டும்.

இவ்வழிகளுக்கு பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோருவோர் ஆரவளித்தல் அவசியம்.இவ்வாறு செய்து இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு பாராளுமன்றத்தை நீடிப்பதே சீரழிந்துள்ள ஜனநாயகத்தை மீளவும் நிலை நிறுத்தி,கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த உதவும்.இதை விடுத்து வெறும் அரசியல் நிகழ்ச்சிக்காக கோரிக்கைகள் முன் வைப்பது மக்களை ஏமாற்றும் செயலே.

2 comments:

  1. ஹி ஹி கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்

    ReplyDelete
  2. Then your not politician??
    Your the team of MR.why you cant blame the govt????

    ReplyDelete

Powered by Blogger.