Header Ads



லெஸ்டரில் கொரோனாவினால் வபாத்தான, இலங்கையரின் ஜனாசா 24 மணித்தியாலத்திற்குள் நல்லடக்கம்

 - பாஸில் ஏ. கபூர் -

 பிரித்தானியாவின் லெஸ்டர் மாநகரிலே முதலாவது இலங்கை முஸ்லிம் ஒருவரின் மரணம் ஈத் திருநாளன்று நேர்ந்தது. 

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டவரும், பிரான்ஸில் நெடுங்காலமாக வாழ்ந்தவரும்,  பின்னர் 2005ம் ஆண்டு முதல் லெஸ்டர் மாநகரில் வசித்தவருமாகிய கச்சு முகம்மது மஃஸூக் என்பவரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் (24/05/20) காலமானார். 

மூன்று பிள்ளைகளின் தந்தையான அவர் லெஸ்டரிலே வாழும் அனைத்து தரப்பினரோடும் அன்பாகவும், பண்பாகவும் பழகியவர் . 

பல சமூக முன்னெடுப்புகளிலும் தன்னை இனைத்துக் கொண்டவர். 

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (25/05/20) பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமையாகவும், திங்கட்கிழமை (25) வங்கி விடுமுறையாக இருந்த போதிலும், இஸ்லாஹ் அமைப்பின் ( Islah Trust) அயராத முயற்சியாலும், M P Col நிறுவனத்தின் தன்னிகரற்ற சேவையினாலும் நல்லடக்கம் சாத்தியமானது. 

இக்கட்டான இன்றைய கால கட்டத்திலும் இவ்வாறான தொண்டுகளை செய்பவர்களை வல்ல இறைவன் அருள்பாளிப்பானாக!!  

எந்தவொரு சலிப்பும் இல்லாமல் பெருநாள் தினத்தன்றும் , களத்தில் நின்று முழு மூச்சாக எல்லாவற்றையும் ஒருங்கினைத்து செயலாற்றிய இஸ்லாஹ் அமைப்பின் தலைவர் ரிபாய் மற்றும் செயலாளர் மிஸ்காத் ஆகியோருக்கு இங்கு வாழும் யாழ் முஸலிம்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதோடு, அவர்களுக்காகவும், மர்ஹூம் மஃஸூக் மற்றும் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்காகவும் வல்ல அள்ளாஹ்விடம் பிரார்த்திக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.            

2 comments:

  1. இன்னாலில்லாஹி வையின்னா இலைஹி ராஜீ யூன்.

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்பு லெஸ்டர் வாழ் முஸ்லிம் உறவுகளே எனது அன்பு நிறைந்த ஈதுள் பித்துர்.
    எங்கள் அன்பு சகோதரர் மெளஸுக் அவர்களின் மவ்து ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தந்தது.
    இருந்தாலும் அன்னாரின் ஜனாஸா மிகவும் துரிதமாகவும், சிறப்பாகவும் நல்லடக்கம் செய்யப்பட்டதை நினைக்க மிகவும் என் உள்ளம் சாந்தியும் திருப்தியும் அடைகின்றது.

    இந்த இக்கட்டான காலகட்டத்தில், அதாவது கோவிட் வைரஸ், ஊரடங்கு நேரத்தில் மிகவும் துல்லியமாக சமூக சிந்தனையுடன் செயல்பட்ட எமது மதிப்புக்குரிய இஸ்லா டிரஸ்டின் (ISLAH TRUST) தலைவர் மற்றும் செயலாளர் அவர்கட்கும், அவருடன் ஒன்று சேர்ந்து அயராது ஒத்துழைத்த எனது நெருங்கிய நண்பர், உறவினர் எல்லோருக்கும் எனது உள்ளம் கனிந்த சலாத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த இக்கட்டான நிலையில் கையாண்ட ஜனாஸா விடயம் எம் எல்லோருக்கும் ஒரு முன்மாதிரி. இது லெஸ்டர் மட்டும் அல்லாது முழு ஐக்கிய இராச்சியம், முழு இலங்கை; ஏன் இந்த முழு உலகத்துக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

    எல்லாம் வல்ல அல்லாஹ், சகோதரர் மெளஸுக் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌசை கொடுத்து, அன்னாரின் குடும்பத்தாருக்கு மண நிம்மதியையும் சாந்தியையும் கொட்டுப்பானாக வேண்டி; மேலும் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கத்திட்காக மிகவும் பாடுபட்ட என் உறவுகளுக்காக வேண்டி என்றென்றும் அல்லாஹ்விடம் பிரார்தித்தவனாக இருப்பேன் என்று கூறி விடை பெறுகிறேன்.
    வஅலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாதுகு. ஆமீன்.

    ReplyDelete
  2. إنا لله وإنا اليه راجعون، اللهم إغفر له وإرحمه وعافيه وعف عنه وأكرم نزله ووسع مدخله وادخله في جنات النعيم

    ReplyDelete

Powered by Blogger.