Header Ads



தப்லீக் ஜமாத், தலைவரின் வேண்டுகோள்

டெல்லியில் ஊரடங்கு சமயத்தில் மத நிகழ்வு நடத்தியதாக வழக்கை எதிர்கொண்டுள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மௌலானா சாத் கந்த்லாவி, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமானவர்கள் தங்கள் ஊநீரை (பிளாஸ்மா) கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு தானமாக வழங்கவேண்டும் என்று நேற்று, செவ்வாய்க்கிழமை, வேண்டுகோள் விடுத்துள்ளார் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

கோவிட்-19இல் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்படும்ஊநீர், கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் நோய் எதிர்பொருள் என்பதால் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

BBC

No comments

Powered by Blogger.