Header Ads



புற்றுநோயுடன் போராடிக்கொண்டே, கொரோனாவை வென்ற இலங்கையர்


புற்றுநோயுடன் போராடிக்கொண்டே கொரோனாவை வென்று பணிக்குத் திரும்பியிருக்கிறார் பிரித்தானியாவில் வாழும் அசாதாரண இலங்கையர் ஒருவர்.

ஜார்ஜ் அழகையா (64), BBC தொலைக்காட்சியில் செய்தி வழங்குபவர். 2014ஆம் ஆண்டு, அழகையா குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்குப்பின் குணமடைந்து பணிக்குத்திரும்பிய நிலையில், 2017ஆம் ஆண்டு மீண்டும் புற்றுநோய்க்கு ஆளானார் அவர்.

புற்றுநோய் சிகிச்சை தொடரும் நிலையில், மூன்று வாரங்களுக்கு முன் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

ஆனால், கொரோனாவையும் வென்று மீண்டும் பணிக்குத் திரும்பியிருக்கிறார் அழகையா! மார்ச் 31 அன்று தொலைக்காட்சியில் தோன்றிய அழகையா, தான் சந்தித்த புற்றுநோய் போராட்டம் கொரோனாவை எதிர்க்கும் தைரியத்தை தனக்குத் தந்துள்ளதாகவும், கொரோனா காரணமாக தான் பணியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

இன்று கொரோனாவை வென்று மீண்டும் செய்தி வாசிக்க திரும்பியுள்ளார் அழகையா! அவரது நண்பரான BBC நிகழ்ச்சித் தொகுப்பாளர் Sophie Raworth, அழகையா ஆறு ஆண்டுகளுக்கு முன் தனக்கு போன் செய்து தனக்கு புற்றுநோய் வந்துள்ள விடயத்தை தெரிவித்ததை நினைவுகூர்கிறார்.

புற்றுநோய் ஆராய்ச்சிக்கான மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற Sophie, ஓட்டத்தை முடித்தவுடன் தானே, ஓடி முடித்த இடத்திலிருந்தே தன் நண்பர் அழகையாவுக்கு போன் செய்து தான் ஓடி முடித்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்வீட் செய்துள்ள Sophie, ஆறு ஆண்டுகளுக்குப் பின் இன்று அழகையா கொரோனாவை வென்று மீண்டும் பணிக்குத் திரும்புகிறார், அசாதாரண மனிதர் அவர் என்கிறார் Sophie.

No comments

Powered by Blogger.