Header Ads



கொரோனாவின் புதிய மையமாக அமெரிக்கா மாறலாம் - WHO எச்சரிக்கை


கொரோனா வைரசின் புதிய உலகளாவிய மையமாக அமெரிக்கா மாறலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஐரோப்பா போன்றதொரு நிலையை அமெரிக்கா விரைவில் எதிர்கொள்ளும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிப்பதால் அந்த நாடு வைரசின் புதிய உலகளாவிய மையமாக மாறலாம் என  உலக சுகாதார ஸ்தாபனத்தின் பேச்சாளர் மார்கிரட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்

நாங்கள் அமெரிக்காவில் பெருமளவானவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்துள்ளோம், அமெரிக்கா வைரசின் புதிய உலகளாவிய மையமாக மாறும் என உடனடியாக தெரிவிக்க முடியாது ஆனால் அதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.