Header Ads



கொரோனா பற்றிய தவறான, செய்திகளை பரப்ப வேண்டாம்

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கற்கும் கொரோன தொற்றுக்குள்ளான நபரின் மகனுக்கும் கொரோனா இருப்பதாக வெளியான தகவல்களின் எந்தவிதமான உண்மையும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு இலக்காகியிருந்த நபர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.

இதற்கிடையில், அவர் சென்ற இடம், சந்தித்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நபரின் மூத்த மகனுக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் அப்படியான எந்த வைரஸ் தாக்கமும் இல்லை என்றும், அது வெறும் வதந்தி என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும், இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் சரியான அறிக்கைகளை வெளியிட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.