உங்களுக்கு கொரோனா தொற்றினால், படத்தை போடலாமா - பொறுப்பற்ற சமூகம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர் ஒருவரின், படம் இணையங்களில் பரப்பப்படுகிறது.
சில ஊடகங்களும் தனிப்பட்டவர்களும் எந்த பொறுப்புமின்றி இதனை வெளியிடுகின்றனர்.
அந்த நபரின் குடும்பம் அரசால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்படி அவரின் படத்தை வெளியிடுவது சரி தானா? குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த தொற்று இல்லாவிட்டாலும் அவர்கள் பின்னர் வெளியில் செல்லும்போது ஊர்மக்கள் தள்ளிவைக்கும் நிலைமை ஏற்படாதா ?
சிலர் வாடகை வீடுகளில் இருந்தால் அவர்களை வெளியேற சொல்லும் நிலையும் ஏன் அவர்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடவும் கூட பயப்பட மாட்டார்களா?
உங்களுக்கு கொரோனா தொற்றினால் உங்களின் படத்தையும் போடலாம்... அப்போது அதன் பாரதூரம் புரியும்...!
Sivarajah Ramasamy

Great Advice to social media users.
ReplyDelete