Header Ads



ஹொரவப்பொத்தான பள்ளிவாசல் மூடப்பட்டது - தொழுதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை


அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மற்றும் ஆபத்தான நிலைமையை கவனத்தில் கொள்ளாது இன்றைய தினம் ஜூம்மா தொழுகையில் கலந்துகொண்ட ஹொரவப்பொத்தனை - கிவுலேகட முஸ்லிம் பள்ளிவாசலின் தலைவர் உட்பட 17 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவப்பொத்தனை - கிவுலேகட முஸ்லிம் பள்ளிவாசலில் சுமார் 70 பேர் இன்று மதியம் ஜூம்மா தொழுகையில் கலந்து கொண்டதாக ஹொரவப்பொத்தனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனடிப்படையில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்மால் விஜயரத்ன, பிரதேச சுகாதார அதிகாரிகள், ஹொரவப்பொத்தனை பிரதேச செயலாளர் ஆர்.செந்தில் உள்ளிட்ட அதிகரிகள் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தனர்.

அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்ற போது, தொழுகையில் ஈடுபட்டிருந்த சுமார் 50 பேர் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் 17 பேர் மாத்திரம் அங்கு இருந்துள்ளனர். தப்பியோடியவர்களின் 50 காலணிகள் பள்ளிவாசலுக்கு வெளியில் இருந்துள்ளன.

பள்ளிவாசலின் தலைவர் உட்பட அங்கிருந்த 17 பேரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

தப்பியோடியவர்கள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைய ஹொரவப்பொத்தனை பெரிய பள்ளிவாசலின் மௌலவி ஏ.எம்.ஷியாம் கவுலேகட பள்ளிவாசலை பூட்டுப் போட்டு மூடியுள்ளார்.

7 comments:

  1. தூக்குத்தண்டனை வழங்க வேண்டும்.

    ReplyDelete
  2. சமூக,சமய தலைமைகளுக்குக் கட்டுப்படாத ( ஜம்ஈஆ வின் ஆலோசனைகளை கடைப்பிடிக்காத) எத்தகைய தரப்பினராயினும் சட்டம் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். இதனை யாரும் கேள்விக்கு உட்படுத்த வேண்டியதில்லை.

    ReplyDelete
  3. இந்த மடையர்களின் செயலால் முழு சமூகத்துக்கும் ஒரு கெட்ட பெயர் கிடைத்து. ஜம்மியத்துல் உலமாவின் அறிவுரைகளை புறக்கணித்து நடந்தால் இப்படியும் நடக்கும்.

    ReplyDelete
  4. It's a good lesson for those who don't respect ACJU's request.

    ReplyDelete
  5. மாட்டுக் கூட்டம்

    ReplyDelete
  6. கடைசி காலம் இப்படிதான் இருக்கும் தகுதியற்ற மூதேவிகளிடம் பொருப்புக்கள் சாட்டப்படும்

    ReplyDelete

Powered by Blogger.