Header Ads



கொரோனாவை பரப்பியதற்காக சீனா மீது வழக்குப் பதிவு - 20 லட்சம் கோடி டொலர் அபராதம் கேட்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டொலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க மாவட்டத்தின் மேற்கு டெக்சாஸ் நீதிமன்றத்தில் டெக்சாஸைச் சேர்ந்த வழக்கறிஞர் லாரி க்ளேமேன் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவு செய்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டது. உலகப்போருக்கான ஆயுதமாக அதை உருவாக்கி, வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சீனா, அமெரிக்க சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டம், ஒப்பந்தம், விதிமுறைகளை மீறிவிட்டது.

அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சீனாவின் எதிரி என்று கருதப்படும் பிறரைக் கொல்ல சீனா, தனது ஆய்வகத்துக்குள் வைரஸை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கோவிட்-19 வைரஸ் இயல்பில் மிகவும் அபாயகரமானது. மனிதனுக்கு மனிதன் தன் இயல்பைப் பிறழ்வாக்கிக் கொள்வது. எளிதிலும் வேகமாகவும் பரவக்கூடியது. இந்தப் புதிய நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸ் ஃப்ளூவை விட, 10 மடங்கு அபாயகரமானது. உலகின் அதிக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சீனாவால் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவை உருவாக்கி, வெளியிட்ட சீன அரசு இதற்காக 20 லட்சம் கோடி டொலர்களை அபராதம் அளிக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. அபராதம் யாருக்கு அளிக்க வேண்டும். அமெரிககாவுக்கா?

    ReplyDelete
  2. Ippavum panattai pattittaan intha kedu ketta americca sinthikkurathu...So, world will know soon who is the master mind behind this... cz Trump already introduced some medicines himself...while world are trying to find the correct vaccine...!

    ReplyDelete

Powered by Blogger.