Header Ads



மகாநாயக்கர்களின் வழிநடத்தல்களை மீறி, நான் ஒருபோதும் செயற்படுவதில்லை - சஜித்


மகாநாயக்க தேரர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பொதுத்தேர்தலில் போட்டியிடும் பிரதேசம் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மகாநாயக்கர்களின் வழிநடத்தல்களை மீறி தாம் ஒருபோதும் செயற்படுவதில்லை எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலை வெற்றிகொள்வதற்கு தேவையான முன்னேற்றகரமான சிறந்த திட்டங்களுடன் செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கு தேவையான புதிய சிந்தனைகளுடன் கூடிய சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

3 comments:

  1. முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் சிங்கள மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்

    ReplyDelete
  2. பாசிச புலித் தழிழனும் சர்வதேசத்திற்கு இலங்கையை காட்டியும் கூட்டியும் கொடுத்த, கொடுக்கின்ற தமிழனும் இலங்கையின் பொருளாதார மற்றும் சௌபாக்கியங்களை அழிவிற்கு உட்படுத்திய தமிழனும் குறிப்பாக அடிபட்டு மூளை சிதறிய அஜன்களும் கூட்டு மொத்த இலங்கை சமூகத்தின் சாபக்கேடுதான்.
    அவர்கள் ஒரு போதும் கரைசேர்வதில்லை.

    ReplyDelete
  3. சஜித்தின் உண்மை ரூபம்,முற்றிலும் பௌத்த மயமானது,சகலவிடயங்களிலும் பௌத்தத்துக்கும் இனத்தூவேசத்துக்கும் முன்னுரிமையளிக்கப்படும் கூட்டு முண்ணனி என்பதை இந்த நாட்டின் சிறுபான்மையினர் வாக்களிக்கும் போது நன்கு உணர்த்து ஆழமாகச் சிந்தித்து அவர்களின் இருப்பை உறுதி செய்யும் கட்சிக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.