Header Ads



சுதந்திரக்கட்சி மதிப்பிழந்து போயுள்ளது, இது ஐக்கிய தேசிய கட்சிக்கு அவர்கள் செய்த செயலுக்கு கிடைத்த தண்டனையாகும்

 (ஆர்.விதுஷா)

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு உடன்படுகின்றாரா என கேள்வி எழுப்பியிருக்கும்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்எம். மரிக்கார் பொதுஜன பெரமுனவிற்கும் -  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலும் வியத்மக  அமைப்பிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலும் சிக்கல் தோன்றியுள்ள நிலையில் , அமைச்சு பதவிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்ற போகின்றார் என்பதை பொதுத் தேர்தலுக்கு முன்னதாக  நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று 11 இடம் பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை தெரிவித்த  அவர் மேலும் கூறியதாவது  ,

வியத்மக அமைப்பினருக்கும் பொதுஜன பெரமுனவிற்கும்  இடையில் வேறுப்பட்ட கருத்து நிலவுகின்றது. அதேபோல் பொதுஜன பெரமுனவிற்கும் ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில்  முரண்பாடுகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் , சுதந்திரக்கட்சி மதிப்பிழந்து போயுள்ளது. இது ஐக்கிய தேசிய கட்சிக்கு அவர்கள் செய்த செயலுக்கு கிடைத்திருக்கும்  தண்டனையாகும்.

இந்நிலையில் ,பொலநறுவை மாவட்டத்திலும் வடக்கு ,கிழக்கு மாகாணங்களிலும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பொது த் தேர்தலில்  போட்டியிடுவதற்கும்,ஏனைய பிரதேசங்களில் தனித்து போட்டியிடுவதற்குமான முயற்சிகளில் தற்போதைய அரசாங்கம் இறங்கியுள்ளது.

இதன் ஊடாக கிடைக்கப்பெறும் வாக்குகளை மையமாக கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை  அமைக்கும் முயற்சியில் பொதுஜன பெரமுன  ஈடுபட்டு வருகின்றது என அவர் இதன்போது தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.