Header Ads



சஜித்தின் கூட்டணியை பதிய வேண்டாம் – ஐதேக தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

சஜித் பிரேமதாச தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியான “ சமகி ஜாதிக்க பலவேகய” என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடும்போது United National Power என்று வருவதால் அது யூ என் பி என்று அர்த்தப்படுவதாகவும்- இதனால் யூ என் பி என்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தனித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழுவிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளர் இதனை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதுடன் – இதன் காரணமாக சம்பந்தப்பட்ட கூட்டணியை இவ்வாறு பதிவு செய்வதை தவிர்க்குமாறும் கேட்டுள்ளார்.sivarajah

No comments

Powered by Blogger.