Header Ads



பிரசவம் எனக்கு கஷ்டத்தை தரவில்லை, இறைவன் அருளால் 5 குழந்தைகளும் நலமாக பிறந்தன

#ஒரே பிரசவத்தில் பிறந்த 5 அதிசய #குழந்தைகள்: தற்போது என்ன செய்கிறார்கள் தெரியுமா?
#கேரளா பெண்ணுக்கு ஒரே #பிரசவத்தில் பிறந்த ஐந்து #குழந்தைகளும் தற்போது 18 வயதை தொட்டுள்ளார்கள்.
#ஆதிநாடு என்ற பகுதியை சேர்ந்த #நசாருதீன்_ரசீனா தம்பதிக்கு #திருமணமாகி ஆறு #ஆண்டுகள் குழந்தை பிறக்காத நிலையில் பல்வேறு #சிகிச்சைகளுக்கு பின்னர் #ரசீனா #கர்ப்பமடைந்தார்.
இது குறித்து மருத்துவர், #நசாருதீனிடம், உங்கள் #மனைவியின் வயிற்றில் நான்கு கரு வளர்கிறது. இதை அவரிடம் சொன்னால் பயப்படுவார் என்பதால் சொல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆனால் #பிரசவ அறையில் யாரும் எதிர்பார்க்காத #அதிசயம் நடந்தது. நான்கு குழந்தைகள் வரிசையாக பிறந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஐந்தாவது #குழந்தை வெறும் 750 கிராம் எடையுடன் பிறந்தது.
இதில் மூன்று #பெண் #குழந்தைகள், இரண்டு #ஆண் குழந்தைகள். அவர்களுக்கு #சுபீனா, #ஷப்னா, #சுமைய்யா, #அமீர், #முகமது ஆதில் என பெயர் வைக்கப்பட்டது.
ஐந்தாவதாக குறைந்த எடையில் பிறந்த #ஷபீனாவை தான் #நசாரூதினும், #ரசீனாவும் சிரமப்பட்டு வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.
இப்போது ஐந்து பேருக்கும் 18 #வயதாகிறது. மூத்த மகன் அமீர் கூறுகையில், எல்லா #வருடமும் எங்களை பற்றிய செய்தி #பத்திரிகைகளில் வந்துவிடும்.
ப்ளஸ் 2 வரை நாங்கள் மூன்று #பள்ளிகளில் படித்த நிலையில், எல்லா பள்ளியிலும் ஒரே பெஞ்சில் தான் அமர்ந்திருந்தோம் என கூறியுள்ளார்.
தற்போது சகோதரிகள் மூவரும் ஆசிரியையாக ஆசைப்பட்டு அதற்கான பயிற்சி நிறுவனத்தில் சேர, சகோதரர்கள் இருவரும் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.
ரசீனா கூறுகையில், எங்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்ததால் எங்களைப் போல் நிறைய பேர் சந்தோஷப்பட்டதுடன் அடிக்கடி பிள்ளைகளை பார்த்து விட்டு செல்வார்கள்.
பிள்ளைகள் ஐந்தாக இருந்தாலும் ஆத்மா ஒன்று தான் என்பது போல் அவர்களுக்குள் நெருக்கமான அன்பு இருக்கிறது.
ஒரு பிள்ளை பெறவே கஷ்டபடும் பெண்கள் மத்தியில் ஐந்து பிள்ளைகளை சுக பிரசவத்தில் பெற்றது குறித்து கேட்கிறீர்கள்,
உண்மையில் #பிரசவம் எனக்கு கஷ்டத்தை தரவில்லை. இறைவன் அருளால் எல்லா குழந்தைகளும் நலமாக பிறந்தன என கூறியுள்ளார், Jalaldeen Mac

2 comments:

  1. الحمد لله بنعمته تتم الصالحات، اللهم لك الحمد ولك الشكر والامتنان ,والحمدلله رب العالمين

    ReplyDelete

Powered by Blogger.