Header Ads



தாய்லாந்து இராணுவவீரன் சுட்டுக்கொலை - 26 பேர் பலி, 57 பேர் காயம் - நடந்தது என்ன..?

பெப்ரவரி எட்டாம் திகதியான நேற்று தாய்லாந்தின்  இராணுவீரர் ஜக்ரபாந் தொம்மா தனது கட்டளை அதிகாரியை கொலைசெய்த பின்னர் இராணுவதளத்திலிருந்து ஆயுதங்களை எடுத்து சென்று கோரட் நகரில் மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதுவரை 26 ற்கும் அதிகமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் 57 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை வணிக வளாகத்திற்குள் முற்றுகையிடப்பட்ட தொம்மா பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

15.30 சுவாதம் பிதாக் இராணுவ தளம்

நேற்று மாலை மூன்றரை மணியளவில் சுவாதம் பிதாக் இராணுவதளத்தில் இந்த தாக்குதல் ஆரம்பமாகியுள்ளது.

தொம்மா தனது கட்டளை தளபதியான கேர்ணல் அனந்தரொட் கிராசே என்பவரை சுட்டுக்கொன்றுள்ளார்.

அவருடன் அவரின் உறவினர்கள் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

அதன்பின்னர் ஜக்ரபாந் எச்கே33; துப்பாக்கி வெடிமருந்துகள் போன்றவற்றை திருடிய பின்னர் அங்கிருந்து தப்பியோடிள்ளார்.

ஆறுமணி- வணிக வளாகம்

அதன் பின்னர் ஆறுமணியளவில் அவர் கொரட்டில் உள்ள டேர்மினல் 21 வணிகவளாகத்திற்கு வருவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

உள்ளே நுழைந்த அவர் வணிகவளாகத்திற்குள் காணப்படுபவர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் தனது முகநூலில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

19.20 – டேர்மினல் 21 நான்காம் மாடி

ஏழரை மணிக்கு டேர்மினல் 21 இன் நான்காவது மாடியில் அந்த நபர் பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அவர் தான் துப்பாக்கியுடன் காணப்படும் படமொன்றை முகநூலில் வெளியிட்டுள்ளதுடன் நான் களைத்து போய்விட்டேன் எனது விரல்களை அசைக்க கூட முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

தாங்கள் நான்காவது மாடியில் உள்ள பல பகுதிகளில் ஒளிந்திருந்ததாக பொதுமக்கள் பின்னர் தெரிவித்தனர்.

உயிரிழப்புகள் குறித்த  தகவல்கள் வெளியாகின்றன.

இரவு எட்டு மணியளவில் பத்துமேரிற்கு கொல்லப்பட்டுள்ளதை  தாய்லாந்து அதிகாரிகள் உறுதி செய்தனர்.

அதேவேளை பல காவல்துறையினர் அந்த கட்டிடத்தை சுற்றிவளைத்ததுடன் பலர் உள்ளே நுழைய முற்பட்டனர்.

குறிப்பிட்ட வணிக வளாகம் சுற்றிவளைக்கப்பட்டது.

குறிப்பிட்ட படைவீரரின் தாயை சந்தித்த காவல்துறையினர் அவரை அந்த வளாகத்திற்கு அழைத்து வந்து மகனை பணயக்கைதிகளை விடுதலை செய்யுமாறு கேட்க செய்தனர்.

அதன் பின்னர் உயிரிழப்பு அதிகரித்ததுடன் துப்பாக்கி சத்தங்களும் கேட்டன.

முகநூல் செயல் இழப்பு

பதினொரு மணியளவில் ஜக்ரபாந்தின் முகநூல் செயல் இழந்தது.அவரது முகநூலை முடக்குமாறு கேட்டுக்கொண்டதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர் முகநூலில் தனது நடவடிக்கைகளை உடனுக்குடன் வெளியிட்டு வந்தார் .

இரவு பதினொரு மணியின் பின்னர் தாய்லாந்து அதிகாரிகள் இராணுவத்தின உதவியை நாட தீர்மானித்தனர்.

இராணுவத்தினர் அழைப்பு

காவல்துறையினருக்கு உதவுவதற்கும் உள்ளே சிக்குண்டுள்ள மக்களை அகற்றுவதற்கும் தாங்கள் தயார் என இராணுவம் அறிவித்தது.

1130 மணியின் பின்னர் தாங்கள் குறிப்பிட்ட வணிகவளாகத்தின் முதலவாது தளத்திலிருந்து மக்களை வெளியேற்றி விட்டதாக படையினர் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக மக்கள் தப்பியோடும் காட்சிகள் வெளிவரத்தொடங்கின..

உயிரிழப்புகள் மீண்டும் அதிகரிப்பு

இரவு 12.மணியளவில் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கின 20ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் தாய்லாந்தின் பதில் பிரதமர் அறிவித்தார்.

அதன் பின்னரும் துப்பாக்கி சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன, இதன் பின்னர் விசேட படைப்பிரிவினர் உள்ளே நுழைந்தனர்.

அவ்வேளை பல அம்புலன்ஸ்களை அந்த பகுதியில் காணமுடிந்தது.

பல படையினர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

காலை 9.00 மணி 

இன்று காலை 9 மணிக்கு ஜக்ரபாந் தொம்மா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினர் அறிவித்தனர்.

1 comment:

Powered by Blogger.