Header Ads



ஐதேக Mp யின் அநாகரீகச் செயல் - அஜித் பீ. பெரேரா குற்றச்சாட்டு


ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் தகவல்களை தனது தொலைபேசி ஊடாக பிரதமர் மகிந்த ராஜபக்ச ஒட்டு கேட்பதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுத்த அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற தலைவரை தெரிவு செய்வது சம்பந்தமான கூட்டத்தின்போது இவ் விடயம் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தனது தொலைபேசி வாயிலாக மகிந்த ராஜபக்ச தகவல்களை கேட்டறிந்து கொள்வதற்காக ஏற்பாட்டை செய்திருந்ததாக கூட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, வஜிர அபேவர்தனவுக்கு விசேட பாதுகாப்பை பெற்றுக்கொடுத்திருந்தார் என கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த, ரணில் அரசாங்க காலத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சராக பதவி வகித்திருந்த வஜிர அபேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளக்கூடிய ஒரு நபராகவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவாகவும் காணப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்திலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பான பல விடயங்களை எதிரணியினருக்கு இரகசியமான முறையில் தகவல்களை கொடுத்திருந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா முதல் முறையாக குற்றம் சுமத்தியுள்ளார்.

1 comment:

  1. மிகப்பெரும் துரோகத்தனம்

    ReplyDelete

Powered by Blogger.