Header Ads



Corona Virus உம், இஸ்லாமும்

சீனாவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பரவி வரும் Corona Virus குறித்த பின்வரும் பதிவை உங்கள் சிந்தனைக்காக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இஸ்லாம் ஒன்றை (ஹலால்) அனுமதிக்கப்பட்டது எனக் கூறினாலோ அல்லது (ஹராம்) அனுமதிக்கப்படாதது எனக் கூறினாலோ அதற்குப் பின்னால் மனித அறிவால் புரிந்துக்கொள்ளக் கூடிய நியாயங்களும் அதனால் புரிந்துக்கொள்ள முடியாத பல நியாயங்களும் நிச்சயம் காணப்படும்.

உணவுக்காக மனிதன் உபயோகிக்கும் மாமிச உணவுகள் தொடர்பில் இஸ்லாம் மிகத் தெளிவான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. மனித வாழ்வுக்கு உகந்தவை எவை? பாதகமானவை எவை? என்பதை நபி (ஸல்) அவர்கள் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் மிகத் தெளிவாகவே அறிவுறுத்தி விட்டார்கள்.

இந்நிலையில் சமகாலத்தில் முழு உலகினதும் கவனத்தை ஈர்த்துள்ள Corona Virus தொற்றானது மனித நுகர்வுக்கு முற்றிலும் ஒவ்வாதவை என இஸ்லாம் எவற்றையெல்லாம் பட்டியல் படுத்தியுள்ளதோ அத்தகைய விலங்கினங்களின் மாமிசங்கள் ஊடாகவே பரவுவதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் இந்த வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள பகுதிகளாகும். இப்பகுதிகளில் இறைச்சிகளை ஏற்றுமதி செய்யும் பண்ணைத் தொழிற்சாலைகளே பிரதானமாக உள்ளன.

குறிப்பாக Wuhan நகரின் இறைச்சிப் பண்ணை ஒன்றிலிருந்தே Corona Virus பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பாம்பு, நரி, முதலை, ஒணான், பல்லி, எலி, மயில் போன்ற 121 காட்டு விலங்குகளின் இறைச்சிகள் இந்நகரில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மனித உடலில் பரவும் அபூர்வமான வைரஸ்களில் 70 வீதமானவை காட்டு விலங்குகளின் ஊடாகவே பரவுகின்றன.

சுமார் பத்து மில்லியன்களுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டுள்ள, கடுமையான நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள Wuhan நகரிலிருந்து எவருக்கும் அனுமதியின்றி வெளியேறவோ வெளி நகரங்களிலிருந்து உள்ளே வரவோ கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

-ஸீ.எம்.எம்.ஸுபைர்.

9 comments:

  1. "மனிதர்களே!

    பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;

    ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்

    - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்."

    (அல்குர்ஆன் : 2:168)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. இஸ்லாம்-

    இருக்கின்ற இடத்தில் தொற்று நோய் ஒன்று எற்பட்டால் - அந்த இடத்தில் இருப்பவர் அதனைவிட்டு வெளியேறவும் கூடாது - அந்த இடத்தை தோக்கி யாரும் உள்நுளையவும் கூடாது.

    இது இஸ்லாத்தின் கட்டளை.

    உணவு வழிமுறையில் இஸ்லாத்தின் வழிகாட்டலைப் புறக்கணித்த சீனா - அதனால் உலகத்தின் முன்னால் தலைகுனிவை சந்திக்கிறது இன்று.

    ஆயினும் சீனா தன்னையும் அறியாமல் இஸ்லாத்தின் கட்டளையை நடைமுறைப்படுத்துகிறது தனது நாட்டிலேயே - தொற்று நோய் ஏற்பட்டுள்ள இடங்களில்.

    ReplyDelete
  3. Corona Virus உம் வங்குரோத்து (Bankrupted) மார்க்கப்பிரசாரமும்

    என்ன கேவலமான மனநிலை இது?

    * பாம்பு, வௌவால் ஆகிய விலங்குகளை சாப்பிட்டதனால் கொரோனா வைரஸ் பரவியது. பார்த்தீர்களா? இதற்குத்தான் மார்க்கம் இதை அன்றே தடுத்தது.

    * உயூகுர் முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியதால் சீனாவை ஆண்டவன் தண்டிக்கிறான் பார்த்தீர்களா?

    * Face Cover ஐ போடத்தடைவிதித்த அதே அரசாங்கத்தை இன்று face mask ஐ போடவைத்த வல்ல இறைவனின் வல்லமையைப் பார்த்தீர்களா?

    அடேங்கப்பா! என்னவொரு லாஜிக்கும்? அழைப்புப்பணியும்! மெய்சிலிர்க்கிறது.

    * தடை செய்யப்பட்ட விலங்குகளை சாப்பிட்டதனால்தான் கொரொனா வைரஸ் பரவியதென்றால், 2012/13 காலப்பகுதியில் இதேபோன்று MERS-CoV ( Middle East Respiratory Syndrome - Corona Virus ) மத்தியகிழக்கு நாடுகளில் அதுவும் ஹஜ்ஜுக்குச் செல்லும் பயணிகளுக்கு பரவி 2500 பேருக்கு தொற்றி 850 பேர் இறந்தார்கள் தெரியுமா? ஒட்டகத்திலிருந்து பரவியதாக சொல்லப்பட்டது.

    ஒட்டகத்தை இறைவன் தடுத்தானா? ஏன் பரவியது? என்ன லாஜிக் உங்கள் லாஜிக்?

    வைரஸ் மரணத்தை விடுவோமே. Sugar, Hypertension, IHD, Obesity என்று நம் சமூகத்தில் கூடி கும்மியடிக்கிறதே. ஆகுமான உணவைத்தானே சாப்பிடுகிறோம்? எல்லா சமூகங்களை விட அதிகமாக இருக்கிறதாம் சதவீதம். எத்தனை தெரியுமா? 40-45% ஆம். பார்க்கப்போனால் குறைவாக அல்லவா இருக்கவேண்டும்?

    * முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியதால்தான் இது சீனாவுக்கு பரவியது என்றால் இது சீனாவில் மட்டும் அதுவும் முஸ்லிமல்லாதவர்களுக்கு மட்டுமல்லவா பரவ வேண்டும்? ஏன் இதுவரை 15 நாடுகளில் பரவியிருக்கிறது? சீனாவில் 30 லட்சம் முஸ்லிம்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்கும் பரவி அவர்களும் இறந்தால் உங்கள் லாஜிக்கை எங்கு கொண்டு போய்வைப்பது? ஏன் அவுஸ்திரேலியாவுக்கு பரவி ஏன் அங்கிருப்பவர்கள் பயந்து சாகவேண்டும்? முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியதுதான் காரணமென்றால் உண்மையில் இது எந்தெந்த நாடுகளில் பரவவேண்டும்? யார் இறக்கவேண்டும்? என்ன எழவு லொஜிக் இது?

    * பேஸ்கவரை தடைசெய்தவர்களை இப்போது பேஸ்மாஸ்க் போடச்சொல்லவைத்துவிட்டான் பார்த்தீர்களா?

    நம் சமூகத்தில் முதலில் எத்தனை % பெண்கள் பேஸ்கவர் போடுகிறார்கள்? நம்மிலேயே அநேகம் பேர் போடுவதில்லையே. எதையுமே தடைசெய்யாத முஸ்லிம்களுக்குப் பிரச்சினை எதுவும் வராத மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா நாடுகளுக்கு ஏனைய்யா வைரஸ் பரவவேண்டும்?

    என்ன கேவலமான விளம்பரம் இது?

    சீனா 14 நாட்களில் 1000 Isolation Rooms கொண்ட தனி வைத்தியசாலை கட்டிக்கொண்டிருக்கிறான். இந்த சோனி இதைவைத்து விளம்பரம் பண்ணிக்கொண்டிருக்கிறான்.

    ஒவ்வோரு நாடும் இதற்கான மருந்து என்ன? Vaccine என்ன என்று முயற்சி செய்துகொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் பரிசோதனைக்கு மேல் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.

    இந்த பிரியாணிச்சோனி 20 x 10 அடி சாப்பாட்டு சஹனொன்றில் பிரியாணிக்குவியலுக்கு மத்தியில் ஒரு முழு ஆட்டை அவித்துவைத்து மூச்சுமுட்ட உணவுக்குழாயின் தொங்கல் வரை தின்றுவிட்டு 'எங்கள் வல்ல இறைவனின் தண்டனையைப் பார்த்தீர்களா' என்று முரசறைந்து கொண்டிருக்கிறான்.

    மாட்டுச்சோனி!

    ReplyDelete
  4. Alhamdulillah..

    Muslim Women in China will be more protected, as they wear FACE COVER which will reduce the chance of infection through inhalation.

    ReplyDelete
  5. பெளத்த தத்துவார்த்தங்களைப் பின்பற்றுவதாகக் கூறும் இலங்கையும், அதில் அதனை விடவும் தூரமாகவுள்ள சீனாவும் தமக்குள் உள்ள ஓர் முழுமையான வாழ்வு நெறியின் வெற்றிடத்தை, இஸ்லாத்தைக் கொண்டு ஈடு செய்ய வேண்டிய காலம் கணிந்துள்ளது.

    ReplyDelete
  6. Super comment pakuththarivalan

    ReplyDelete
  7. இங்கு ஒருவர் மாட்டுச்சோனி என்று அகெளரவப்படுத்துகிறான் அப்படியானவரின் கருத்தையெல்லாம் பிரசுரிக்கிறீர்கள்.

    ReplyDelete
  8. இஸ்லாமிய நடைமுறைகளையும்,உணவு பழக்கவழக்கங்களையும் ஒப்பிட்டு கதைப்பதற்கு இது சந்தர்ப்பமுமல்ல அவசியமுமல்ல .தொற்று நோய் யாரையும் விட்டுவைக்காது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    ReplyDelete
  9. This problem is nothing to do with the Religion. Jaffna Muslim please do not publish this kind of articles.

    ReplyDelete

Powered by Blogger.