Header Ads



16 இல் தீர்வு இல்லையேல், விளைவுகள் பாரதூரமாகலாம் - மனோ எச்சரிக்கை

- Mano Ganesan -

யூஎன்பி கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லை போல் தெரிகிறது.

இக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும், "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்ற முதிர்ச்சியற்ற அரசியலை எப்போதும் செய்யாததாலும் இது பற்றி நாமும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.

இல்லா விட்டால் "சரிதான் போங்கடா" என நாம் சும்மா இருக்கலாம்.

இப்போ பார்த்தால் இவர்களில் சிலர் இரகசியமாக ஆளும் கட்சியுடன் உறவாடி அரசுக்கு 2/3 பெரும்பான்மை பெற்றுத்தர திட்டமிட்டு செயல்படுவதாகவும் தெரிகிறது.

"பங்காளி சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். நாம் ஐதேகவாக தனித்து போட்டியிடுகிறோம்" என நவின் திசாநாயக்க சொல்லி பார்க்கிறார். "அப்படி சொல்ல வேண்டாம்" என நவீனை திருத்த ரணில் விக்கிரமசிங்க தயாராகவுமில்லை.

எல்லோரும் தனித்து போட்டியிட்டால், இது ஆளும் கட்சிக்கு 2/3 சுலபமாக பெற்று தரும். ஆகவே இது ஆளும் கட்சியின் இரகசிய திட்டம்.

இப்படி யூஎன்பிகாரர்கள் இரகசியமாக உறவாடுவது, செயற்படுவது, சில சிறுபான்மை பங்காளி கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சியுடன் பகிரங்கமாகவே பேசுவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிகிறது.

16ம் திகதி நடைபெறவுள்ள இறுதி சமரச கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால், விளைவுகள் பாரதூரமாகலாம்.

4 comments:

  1. MNOVITKU DAHIRIYAM IRUNDAAL, YAANAIYIN VAALIL TONGAAMAL, THANITHU POTTIYIDATTUM
    PAARKALAAM.

    ReplyDelete
  2. நவீன் சொல்வதுதான் சரி நீங்களும், Slmc யும் தனித்துப் போட்டியிடுங்கப்பா. யானையுடன் ஒட்டியுள்ள ஒட்டுண்ணிகள்.

    ReplyDelete
  3. MANO GANESAN THINKS NO END OF HIM SELF.WITH OUT THE SUPPORT OF UNP(MONEY FOR ELECTION EXPENSES)HE WILL NOT BE ABLE TO WIN IN COLOMBO UNDER THE CURRENT POLITICAL CLOUD.ALREADY HE DOES NOT SEE EYE TO EYE WITH RAVI KARUNANAYAKE OVER VOTE CATCHING IN COLOMBO NORTH AREA.RAVI WILL BE ALL OUT TO MAKE TO LOOSE.

    ReplyDelete
  4. என் தோழனும் மிக சிறந்த தனி மனித ஆழுமையுமான மனோ கணேசனை வாழ்த்துகிறேன். அவரது ஒரே சிக்கல் அவருக்கு கட்ச்சிகளின் அமைப்பு ரீதியான நிறுவன கட்டுக்கோப்பும் அதன் பிரகாரம் தீர்மானிக்கப்படும் அமைப்பு ரீதியான பலமும் அமைப்பு ரீதியான செயல்பாடுமாகும். இதனால் அவர் தன் கட்ச்சியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த வேண்டிய இந்த தருணத்தை தவறவிடுகிறார். மேலும் தன் இருப்புக்கு அமைப்பு ரீதியான பக்கபலமாக இருக்கும் யு.என்.பி மற்றும் தமிழர் கூட்டமைப்பின் அமைப்பு பலத்தை உணராமல் அவற்றுடன் மோதல் வளர்க்கிறார். உள்விவகாரங்களில் தலையிடுகிறார். இதே சிக்கல் அமைப்புத் தன்மையற்ற மறொரு தனி மனித ஆழுமையான சஜித் பிரேமதாசவுக்கும் உள்ளது. சஜித்தை நம்பி யு.எப்ன்.பியின் அமைப்பு ரீதியான தலைவர் ரணிலோடு மோதுவது கெடுதலானதாக முடியலாம். மேலும் வடகிழக்கில் அமைப்பு ரீதியாக பலமான கட்ச்சியான கூட்டமைப்புக்கு வெறுப்பூட்டுவது நுனி மரத்தில் இருந்துகொண்டு அடிமரத்தை வெட்டுவது போன்றதாகும். அன்பு நண்பர் மனோ தனது அண்மைக்கால அரசியல் அணுகுமுறையை மீழாய்வு செய்ய வேண்டும். அதேசமயம் வடகிழக்கில் கூட்டமைப்போடு முரண்பாடுகளை செம்மை செய்வதன் மூலம் மேல்மாகாணத்தில் தன்னை பலப்படுத்திக்கொள்ளவேண்டும். முஸ்லிம் மக்களோடும் சிங்கள ஜனநாயக சக்திகளோடும் உள்ள உறவையும் செம்மைப் படுத்தி பலப்படுத்த வேண்டும்.
    ஏனெனில் மனோ கணேசனைப்போன்ற போன்ற ஒரு ஆழுமை நிச்சயம் தமிழ் பேசும் மக்களுக்கு மிகவும் அவசியம்.

    ReplyDelete

Powered by Blogger.