Header Ads



55 இலட்சம் வாக்குகளைப் பெற்று, யானையின் பெயரைக் காப்பற்றியது சஜித்தான்

- ரஞ்சித் ராஜபக்ஷ -

காரொன்று மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதே,  நாட்டின் தேசியப் பிரச்சினையாக மாறியுள்ளதாக விமர்சித்த தேசிய மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமிர பெரேரா, பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடமேறிய அரசாங்கம், அதனை நிலைநாட்டாது வேறு விடயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் சாடினார்.

ஹட்டனில்   நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் கைது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப்  பாதுகாப்பதற்காக நடத்தப்படும் நாடகமாகக்கூட இருக்கலாம் என்று தான் சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவப் பிரச்சினையைத் திசைத்திருப்புவதற்காக, சம்பிக்கவின் கைது இடம்பெற்றிருக்கலாம் என்றும் அல்லது முன்னாள் பிரதமர் ரணிலைக் காப்பாற்றுவதற்காகவும் சம்பிக்க கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்து நிற்கின்ற நிலையில், வாழ்க்கைச் செலவீனங்களைக் குறைப்பதுத் தொடர்பிலான ஆக்கப்பூர்வ கலந்துரையாடல்கள் எதும் இந்த அரசாங்கத்தால் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்றும் சாடினார்.

மத்திய வங்கியின் பினைமுறி மோசடி, எம்.சி.சி ஒப்பந்தம் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், இதுவரை அது தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

எம்.சி.சி ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் எதிர்த்தவர்களுக்கு, தற்போது அந்த ஒப்பந்தம் 70சதவீதம் நன்மையாகத் தெரிவது எவ்வாறு என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசாங்கம், வாகன விபத்துத் தொடர்பிலான வழக்கை தூக்கிப்பிடித்துள்ளதாகவும் காரொன்று மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதுதான் இன்று நாட்டின் தேசிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் விமர்சித்தார்.

சம்பிக்க ரணவக்கவுடன் தொடர்பான வாகன விபத்தை விசாரிப்பதற்காகவே, இந்த அரசாங்கம் ஆட்சி பலத்தைக் கையிலெடுத்துள்ளதாகவும் ஆட்சிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், வாகன விபத்துத் தொடர்பிலான விடயங்களைத் தூக்கிப்பிடித்துள்ளமையானது அரசியல் பழிவாங்கல் என்பதையே காட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.

தலைமைத்துவப் பதவியை வைத்துக்கொண்டு இழுபடாது தீர்க்கமான முடிவுக்கு வருமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிமரசிங்கவுக்கு தான் வலியுறுத்துவதாகவும் தாராளமய ஜனநாயகத்தை குறைமதிப்புக்கு உட்படுத்த வேண்டாம் என்றும் ஐ.தே.கவுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதற்காக, சஜித் பிரேமதாஸவை ஒதுக்கி வைக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

55 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் பெயரைக் காப்பற்றியவர் சஜித் பிரேமதாஸ என்றும் முழு நாடும் கேட்ட சஜித்துக்கு, தலைமத்துவப் பதவியை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

1 comment:

Powered by Blogger.