Header Ads



நாளை UNP விசேட மாநாடு - 10,000 பேருக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிலைப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு நாளை (03) முற்பகல் 10 மணிக்கு கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர். 

கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.  

கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவர். தேர்தலை வெற்றிகொள்வதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களும் இம்மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.  

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டமைக்கான அங்கீகாரமும், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதற்கான அங்கீகாரமும் இம் மாநாட்டின் போது நிறைவேற்றப்படவுள்ளதாக கட்சியின் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.    

No comments

Powered by Blogger.