Header Ads



சஜித்திற்கு ஆதரவளிக்கும் முட்டாள்தன செயற்பாட்டில் ஜனாதிபதி இறங்கமாட்டார் என நினைக்கின்றேன் - விமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதற்கான தீர்மானத்தை இன்று அல்லது நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படும் புதிய அரசாங்கத்தினூடாக எந்தவொரு அரசியல் பழிவாங்கும் முயற்சியும் இடம்பெறாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கொழும்பில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சியின் ஆதரவு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும், எமது வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இன்று அல்லது நாளை கிடைக்கும் என்றுதான் எதிர்பார்க்கின்றோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதானமாக யோசித்து ஒரு முடிவுக்கு வருவார். சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்து ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடும் முட்டாள்தனமாகன செயற்பாட்டில் ஜனாதிபதி இறங்கமாட்டார் என்று நினைக்கின்றேன்.

அவ்வாறு செய்தால் சுதந்திரக் கட்சியின் எஞ்சிய சுவாசமும் போய்விடும் என்பதை உணர்ந்துகொள்ளும் சக்தி ஜனாதிபதிக்கு இருக்கும் என்று நம்புகின்றேன்.

எதிரணியினர் மீது பழிவாங்கும் படலத்தை மேற்கொள்வதை இந்த நாட்டு மக்கள் அறுவெறுக்கின்றனர்.

குற்றம் செய்திருந்தால் நாட்டிலுள்ள சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து பழிவாங்குவதற்காகவே விசேட நிறுவனங்களை அமைத்து பழிவாங்கும் அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு எமது அணியினர் தயாராக இல்லை.” என அவர் மேலும் கூறினார்.

1 comment:

Powered by Blogger.