Header Ads



எம்மால் மட்டுமே இந்த நாட்டினை கட்டியெழுப்பவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும் - கோத்தாபய

நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப இராணுவத்திற்கும் புலனாய்வுதுறைக்கும் உரிய அதிகாரங்களை கொடுப்பதுடன் இந்த நாட்டினை கட்டுப்பாடான நாடாக கட்டியெழுப்பும் வகையில்  நாட்டினை பொறுப்பேற்க தயாராக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறினார். 

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டங்களில் ஒன்று இன்று -14- நிகவரட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு உரையாற்றினார். 

இந்த நாட்டினை  பாதுகாப்பான நாடாக மட்டுமல்ல ஒழுக்கமான சட்டம், ஒழுங்கை சரியாக கடைப்பிடிக்கும் நாடாவும் மாற்ற வேண்டும். அதற்கான நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்த நாட்டில் இராணுவத்திற்கு உரிய அதிகாரங்களை கொடுத்து, புலனாய்வு துறைக்கான சரியான அதிகாரங்களை கொடுத்து இந்த நாட்டினை பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டும். இராணுவத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் முதலிடம் கொடுக்க வேண்டும். அதை விடுத்தது புதிய லிபரல் கொள்கை கொண்டவர்களின் மூலமாக இந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் அதில் இராணுவத்திற்கான பங்கு அதிகமாக இருக்க வேண்டும். எம்மால் மட்டுமே இந்த நாட்டினை கட்டியெழுப்பவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் முடியும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

3 comments:

  1. FIROON ALSO SAID LIKE YOU.ALMIGHTY DRIVEN OUT HIM.
    FIROWN AND YOUR GROUP VERY MATCHED.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் பெரும்பாலான எருமை மாடுகளும், வெறும் கழுதைகளும் இருக்கும் வரை இந்த நாட்டை ஆளுவதற்கு சுரண்டி களவாடியகோடானகோடி பணத்தை அள்ளிக்கொட்டினை மக்களை ஏமாற்றும் எந்த ஒருகொலைகாரனுக்கும் இந்த நாட்டில் ஆட்சியாளனாக வரமுடியும்.

    ReplyDelete
  3. ஏன் UNP வென்றால் சரத்பொன்சக்கா பாதுகாப்புத்துறையில் உள்ள அவர்களின் ஆட்களால் முடியாதா அவர் உங்களைவிட இந்த விடையத்தில் திறமை வாய்ந்தவரே!

    ReplyDelete

Powered by Blogger.