Header Ads



ஜனாதிபதியானால் மாணவர்க்கு 2 சீறுடைத்துணி, மதிய உணவு, ஜனசவிய திட்டத்தை அறிமுகப்படுத்துவேன் - சஜித்

மனிதனின் முதலாவது கடமையும், பொறுப்பும் மனிதனுக்கு சேவையாற்றுவதேயாகும். அந்தவகையில் எனது தந்தையார் எங்கோ இருந்து, என்னுடைய அரசியல் பயணத்திற்கு சக்தியளித்துக் கொண்டிருக்கின்றார். பிரேமதா ஒருவர் வாக்குறுதி அளித்தால், அதனை நிறைவேற்றுவதற்கு தனது உயிரையும் அர்ப்பணிப்பார் என்பதை மனதிலிருத்திக்கொள்ள வேண்டும் என்றுபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று -14-  இரத்தினபுரியில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இரத்தினபுரியை அபிவிருத்தியில் மிளிரும் ஒரு மாவட்டமாக மாற்றுதல், பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு சீறுடைத்துணிகளைப் பெற்றுக்கொடுத்தல், பாடசாலைகளில் மீண்டும் மதிய உணவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல், சமுத்தியை மேலும் வலுப்படுத்தல், 'ஜனசவிய' திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தல் உள்ளிட்டவற்றை நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவான பின்னர் செயற்படுத்துவேன் என்ற வாக்குறுதியையும் வழங்கினார்.

No comments

Powered by Blogger.