Header Ads



எங்களுக்குத் தேவை, சுதந்திர காஷ்மீர்...


கடந்த வாரம் வெள்ளியன்று, மசூதியில் தொழுகை நடந்து முடிந்தபின் ஸ்ரீநகரில் பெரும் அளவில் போராட்டம் நடந்த சௌரா பகுதிக்கு, வெள்ளிக்கிழமையான இன்றும் பிபிசி குழு சென்றது.

ஆகஸ்ட் 9, வெள்ளிக்கிழமை நடந்த இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

சௌரா பகுதிக்கு பிபிசி குழு இன்று சென்றபோது தெருக்கள் எங்கும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. அவை நீக்கப்பட்டால் பெரும் அளவில் கூட்டம் கூடலாம் என்று பாதுகாப்பு படையினர் கருதினார்கள். போராட்டக்காரர்கள் முக்கியச் சாலைக்கு வந்துவிட்டால் சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கையாள்வது கடினம் என்று அவர்கள் கருதினார்கள்.

இன்று -16- மாலை தொழுகைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் சௌராவில் உள்ள மசூதிக்கு வந்தனர். ஆண்களும் பெண்களும் அமைதியாக ஊர்வலம் சென்றபின் மீண்டும் மசூதிக்கே வந்தடைந்தனர்.

பேரணிக்கு பிறகு காஷ்மீர் விடுதலை குறித்த பாடல்கள் தர்காவின் ஒலிபெருக்கிகளில் கேட்க முடிந்தது. இந்த ஒலிபெருக்கிகள் மூலம்தான் போராட்டத்தில் வந்து கலந்துகொள்ளுமாறு இன்று காலை முதல் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்திய அரசிடம் தங்கள் உரிமையையே தாங்கள் திரும்பக் கேட்பதாக பேரணியில் கலந்துகொண்ட ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன்மூலம் காஷ்மீரை இந்திய அரசு ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளது என்றார் பேரணியில் பங்கேற்ற பெண் ஒருவர்.

அப்பெண் இவ்வாறு கூறுகிறார். "நாங்கள் இந்தியாவுடனும் இருக்க விரும்பவில்லை; பாகிஸ்தான் உடன் இருக்கவும் விரும்பவில்லை; எங்களுக்குத் தேவை சுதந்திர காஷ்மீர்."

5 comments:

  1. Hello, இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் பகுதிகளை 1200 ம் ஆண்டுகளில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்தார்கள் என்பது தான் உண்மை.
    எனவே இங்கு வெளியேற வேண்டியது ஆக்கிரமிப்பாளர்களான முஸ்லிம்கள் மட்டுமே.

    நீங்கள் பாக்கிஸ்தான் காஷ்மீரையும், சீன கா௳ஷ்மீரையும் போராடி பெற்றுங்கள், இந்திய காஷ்மீரிலிருந்து உடனடியாக வெளியேற்றங்கள்

    ReplyDelete
  2. உண்மை அது ஒரு சுதந்திர நாடு.பிரித்தானியா காலத்துக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே அது தனியே இருந்து பின் பிரித்தானியாவால் சில கட்டுப்பாடுகலுடனும்,எதிர்காலத்தில் அந்த மக்கள் விரும்பினால் தனி நாடாக பிரிந்து போக கூடிய நியமங்களுடனும்,ஒப்பந்தங்கலுடனும் பிரித்தானியாவால் திரு.நேரு அவர்களிடம் கையலிக்கப்பட்ட ஒரு சுதந்திர தேசம்.எனவே இந்த விடயத்தில் பிரித்தானியாதான் அந்த மக்கள் படும் துன்பங்களுக்கு பதில் கூற வேண்டும்.எனவே,தான் தற்காலிகமாக கொடுத்த அந்த தேசத்தில் தற்போது நடக்கும் கொடூரங்கலை பிரித்தானிய கட்டாயம் தட்டிக் கேட்க வேண்டும்.அந்த மக்களை பாதுகாக்க முன் வர வேண்டும்.

    ReplyDelete
  3. @Rizard, உங்களுக்கு காஷ்மீர வரலாறு தேறியவில்லை.
    எப்படியென்றாலும்... தற்போது பிரித்தானியா, அமேரிக்க, UN எல்லலாரும் இந்தியவுக்கு தான் சப்போட்.
    பயங்கரவாத நாடான பாக்கிஸ்தானுக்கு எந்தவொரு நாடும் அதரவில்லை

    ReplyDelete
  4. ரிஷாத் தம்பி கூறிய விடயங்கள் காஷ்மீர் வரலாற்றில் இந்தியாவின் வகி பாகத்தைத் தொட்;டு நிற்கின்றது. சும்மா கிடந்த இந்தியா இவ்வரலாற்றுப் போக்கில் குறுக்கே நயவஞ்ஞகமாக வீழ்ந்ததுதான் காரணம். சகல முஸ்லிம் நாடுகளும் ஒன்று சேர்ந்து ஐநா விலும் பிரித்தானியாவிடமும் வரலாற்றுரீதியில் ஆதாரங்களுடன் முறையீடு செய்யும்போது இப்பிரச்சினைக்கு ஏதோ ஒரு வழியில் தீர்வு கிடைக்க வாய்பப்பு உண்டு. பாகிஸ்தான் வீம்புக்கு காஷ்மீரில் நடாத்தப்படும் தீவிரவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் காஷ்மீர் பிரச்சினையில் முதல் வெற்றிக்கு அது அடிகோலுவதாக இருக்கும்.

    ReplyDelete
  5. Ajan தமிழ் பெண்களை அந்த இந்திய ரானுவம் சூறையாடிய வரலாறை முதலில் படித்துப் பார்.ஶ்ரீ லங்காவில் வட,கிழக்கில் நடத்திய வெறியாட்டம் அடங்கலாக.

    ReplyDelete

Powered by Blogger.