Header Ads



சரத் பொன்சேக்காவுக்கு, பொதுஜன பெரமுன புகழாரம்

பொது­ஜன பெர­மு­னவின் வெற்­றிக்கு  ஸ்ரீலங்கா சுதந்­திர  கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் நிச்­சயம் ஆத­ரவு வழங்­கு­வார்கள். ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டுவோம் என்று சுதந்­திரக் கட்­சி­யினர் பேச்­ச­ளவில் மாத்­திரம் குறிப்­பிட்டால் போதாது செய­ல­ள­விலும் செயற்­ப­டுத்த வேண்டும். 

என எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செஹான் சேம­சிங்க தெரி­வித்தார். நாட்டின் தேசிய பாது­காப்­பினை கருத்திற்கொண்டே பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கி­யுள்ளார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா குறிப்­பிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. தேசிய   பாது­காப்பு  தொடர்பில் ஆளும் தரப்பில் அவரை தவிர அறிந்­தவர் பிறி­தொ­ருவர் கிடை­யாது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் விவ­கா­ரத்தில் எதி­ர­ணியில் பிள­வினை ஏற்­ப­டுத்­தவே  ஆளும் தரப்­பினர் முயற்­சித்­தார்கள். ஆனால் அவர்­களின் நோக்கம் தற்­போது  தோல்­வி­ய­டைந்­துள்­ளது. 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவே ஜனா­தி­பதி வேட்­பாளர் என்­பதை ஆரம்­பத்தில்  இருந்து  குறிப்­பிட்டோம். கட்சி உறுப்­பி­னர்­களின் அபிப்பி­ரா­யத்­திற்கு மதிப்­ப­ளித்தே   பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் உரிய தீர்­மா­னத்தை கட்­சியின் கன்னி சம்­மே­ள­னத்தில் உத்­தி­யோக பூர்­வ­மாக நாட்டு மக்­க­ளுக்கு அறி­வித்தார்.

தேசிய பாது­காப்­பி­னையும், நாடு தற்­போது அடைந்­துள்ள நிலை­மை­க­ளையும்  கருத்திற் கொண்டே எதி­ர­ணி­யினர் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை கள­மி­றக்­கி­யுள்­ள­தாக  பீல்ட்­மார்ஷல் சரத் பொன்­சேகா குறிப்­பிட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்­கது. தேசிய பாது­காப்பு தொடர்பில் அவ­ரை­விட அனு­பவம் கொண்­டவர் வேறெ­வரும் கிடை­யாது.

இன்று தேசிய  பாது­காப்­பிற்கு முக்­கி­யத்­துவம் கொடுக்கும் தரப்­பி­ன­ரையே   நாட்டு மக்கள்  எதிர்­பார்க்­கின்­றார்கள்.

நாட்டு மக்கள் மீது ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எவ்­வித அக்­க­றையும் கிடை­யாது. ஒரு விட­யத்தை இலக்­காகக் கொண்டு ஒரு ஜனா­தி­பதி வேட்­பா­ளரை கள­மி­றக்­கு­வதில் பாரிய போட்­டி­களும், முரண்­பா­டு­களும் ஏற்­பட்­டுள்­ளன. ஐக்­கிய தேசிய கட்­சிக்குள் காணப்­படும் நெருக்­க­டிகள்  இறு­தியில்  நாட்டு மக்­க­ளுக்கே பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும். இதுவே கடந்த நான்கு வருட கால­மாக நாட்டில் நில­வி­யது. 

 இந்­நி­லைமை தொடர இனியும் இட­ம­ளிக்க முடி­யாது. பொது­ஜன பெர­மு­ன­வுடன் நிச்­சயம் ஸ்ரீ லங்கா சுதந்­திர கட்­சியின் பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் இணைவார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுகின்றோம் என பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட்டால் போதாது.  

செயலளவிலும் செயற்படுத்த வேண்டும். எமதுவெற்றிக்கு நிச்சயம் சுதந்திரக்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள்  என்றார்.

(இரா­ஜ­துரை ஹஷான்)

No comments

Powered by Blogger.