Header Ads



ஐரோப்பவின் மிகப்பெரிய பள்ளிவாசல் திறந்து வைக்கபட்டது (படங்கள்)


ரஷ்யாவின் செசென்யாவில் 200 நாடுகளை சார்ந்த முஸ்லிம் தலைவர்கள் முன்னிலையில் ஐரோப்பா கண்டத்தின் மிகப்பெரிய இறைஇல்லத்தை இன்று உலகமுஸ்லிம் லீக் தலைவர் டாக்டகர்அஹ்மத் ஈஸா அவர்கள் திறந்து வைத்தார்கள்

இந்த திறப்பு விழா நிகழ்வு மிக சிறப்பான முறையில்மூன்று நாட்கள் நடைபெறும் ஒரு உலக .இஸ்லாமிய மாநாடாக நடத்த படுகிறது

இதற்க்காகன அனைத்து ஏற்பாடுகளையும் செசென்யாவின் இஸ்லாமியகுடியரசு சிறப்பாக செய்துள்ளது

இந்த நிகழ்வில் இரு பெரும் போட்டிகள் நடத்த படுகிறது

முதல் போட்டி அரபு இலக்கியம் தொடர்ப்பான போட்டி இதன் தலைப்பு மாநபியின் புகழ் 
சமூக ஒற்றுமை

இரண்டாவது போட்டி உலகம் தழுவிய முறையில் குர்ஆன் ஓதல் போட்டி

இந்த பள்ளி கட்டுவதற்க்கான அடிக்கல் 2012 ஆம் ஆண்டு ஊன்றபட்டது

சுமார் எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இறையில்ல பணி தற்போது தான் நிறைவு பெற்றுள்ளது

உஸ்பெகிஸ்தானை சார்ந்த சிறந்த கட்டட கலை நிபுணர் அப்துல் கஹ்ஹார் அவர்கள் தலைமையில் இந்த இறையில்ல கட்டட பணி நிறைவு பெற்றுள்ளது

இந்த இறை இல்லத்தின் பரப்பளவு 9700 சதுர மீட்டராகும்

உள் பள்ளியில் 20000 பேர் தொழும் விதத்திலும்

பள்ளியின் வளாகத்தில் ஒரு லட்சம் பேர் தொழும் விதத்திலும் இந்த இறைஇல்லம் அமைக்க பட்டுள்ளது

இரண்டு அடுக்குகளை கொண்ட இறையில்லத்தின் 65 மீட்டர் அகலம் கொண்ட குப்பாவை சுற்றி நான்கு ஓரங்களிலும் 63 மீட்டர் உயரம் கொண்ட நான்கு மினராக்கள் உருவாக்க பட்டுள்ளது

இந்த இறைஇல்லம் தொழுகைக்கு மட்டும் இல்லாமல்அனைத்து வித மார்க்க செயல்பாடுகளுக்காகவும் பயன் படுத்த படும் என செசென்யாவின் மார்க்க அறிஞர் குழு அறிவித்துள்ளது.


5 comments:

  1. செச்சினியாவின் சனத்தொகையில் 95% முஸ்லிம்கள்.
    இது ஒரு காலத்தில் துருக்கியின் ஒரு பகுதி, பின்னர் துருக்கி-ரஷ்ய யுத்தத்தில் ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்டது.
    1996-2010 வரை தனிநாடு கோரி செச்சினிய முஸ்லிம்கள் துருக்கியின் உதவியுடன் ரஷ்யாவுடன் போராடி 100,000 செச்சினிய மக்கள் இறந்தார்கள்.

    ReplyDelete
  2. Building a big Masjid is the sign of HOUR. Instead, the money spent for this Masjid could have been used for millions of poor people struggling for their daily life.

    ReplyDelete
  3. Ajan 100000 செச்சினிய மக்கள் இறந்தாலும்,அங்கே வெற்றி.ஆனால் பல லட்சம் தமிழர்கள் இறந்தும் Sri Lanka வில் உங்கலுக்கு எப்படி ஆப்பு கிடத்தது இறுதியில்.

    ReplyDelete
  4. Rizard, வழமை போல முஸ்லிம்களுக்கு ரஷ்யாவிலும் தோல்வி தான்

    ReplyDelete

Powered by Blogger.