August 19, 2019

கண்டிக்கு சென்ற புகையிரதத்தில், நடந்த மனிதாபிமானமற்ற செயல்


கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் கைகுழந்தை யுடன் தரையில் அமர்ந்திருக்கும் ஒரு தாய்!!

கைகுழந்தையோடு பயணத்தை மேற்கொள்ளும் ஒரு தாய் தரையில் இருக்கிறாள்.

அதைக் கண்டு கொள்ளாமல், அவளுக்கு இருக்கை கொடுக்காமல், சக பயணிகள் நடந்து கொள்ளும் விதம் வெட்கத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

மனிதாபிமானம் உள்ள எவரும் இதுபோன்று நடந்து கொள்ளமாட்டார்கள்.

6 கருத்துரைகள்:

இது இலங்கையிலா?
இந்தியாவிலா?

Having printed HENA on her hand she must be a Mulsim woman.
Racism at its best.

இந்தப் பெண் ஒரு முஸ்லிம்தான். இதுல பரிதாபத்திற்குரிய நிகழ்வு என்னன்னா அவங்களுக்குப் பக்கத்தில் ஒரு பையன் அவங்கட Shoulderல் தலை வைச்சு தூங்குற மாதிரி இருக்கு. ஒரு சின்ன மீட்டல் (flashback). நான் கல்லூரில் படிக்கும் காலத்தில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பிற்கு Night Train ல் என்னிடம் பொறுப்பிக்கப்பட்ட ஒரு முஸ்லிம் பெண் பிள்ளையுடன் (இப்ப அவங்க ஒரு SLAS அதிகாரி). பயணம் சென்றேன். நான் இருந்த Compartment ரொம்ப full. மிக அதிகமானோர் நின்று கொண்டும் பயணித்தனர். வாழைச்சேனையில் வைத்து ஒரு தமிழ் அம்மா தன்னுடைய இரு சின்னப் பிள்ளைகளுடன் ஒன்று கைக்குழந்தை train ல் ஏறி எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து கீழே அமர்ந்தார்கள். இதனைக் கண்ணுற்ற எங்களுக்கு ரொம்ப திண்டாட்டமாகப் போய்விட்டது. யார் அவங்களுக்கு சீட் கொடுக்கிறது என்ற போராட்டம. புத்து நிமிடத்திற்கு ஒரே நிசப்தம்தான். ஆயினும் எவரும் அந்த அம்மா அவர்களுக்கு சீற் கொடுக்க முன்வரவில்லை (நானும்தான்). என் அருகில் அமர்ந்திருந்த அந்த முஸ்லிம் பெண்பிள்ளை உடன் எழுந்து தன் சீட்டை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அவர் இருந்த இடத்தில் அமர்ந்தார். நான் மட்டுமல்ல பலரும் சீட்டை பங்கிட்டுப் பயணிப்போம் என்று அப்பிள்ளையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தோம். அந்தப் பெண் மசியவில்லை. என்ன சொல்ல வருகிறேன் என்றால் இப்படியான கட்டத்தில் தேவைப்படுவோருக்கு உதவி புரிய செவ்விய மனம் இருக்க வேண்டும். பலரும் பன்னோக்கத்தில் பயணம் செய்கின்றனர். நாளை தொழிலுக்குப் போக வேணும். வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டும் என்று ஆள் பிடித்து கஷ்டப்பட்டு reserve பண்ணின சீட். அதை இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டு யாரும் நீண்ட தூரத்திற்கு நின்று கொண்டு பயணிக்க விரும்பமாட்டார்கள். இங்க சாதி மதம் மொழி ஒன்னும் இல்லங்க. இதில என்ன பெரிய விடயம் என்னவென்றால் மனமும் தைரியமும்தான். இவை இரண்டும் பலமாக இருக்கும் என்றால் மற்றவர்களுக்கு எந்த நிலையிலும் உதவி செய்யக்கூடிய மனப்பக்குவம் இயல்பாகவே ஏற்பட்டுவிடும். எங்கேயும் தைரியமாகவும் செல்லலாம்.

No one has to be blamen. The problem lies with government for not making enough compartments available. We are facing this inconvenience for last 70years. No improvement but MPs who represented us travel on luxury vehicles and comfort.

Brother Suhood thank you for writing the reality

@TrueF: Thanks for your compliments. Jazakkumullah Kheiran. May Almighty Allah showering his blessings upon you for lengthy, wealthy and healthy life.

Post a Comment