Header Ads



இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் கிறீம்கள் - ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள்


அழகினை மெருகூட்ட இலங்கையில் பெண்கள் பயன்படுத்தும் கிறீம்கள் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனடிப்படையில் தற்போது சந்தையில் உள்ள சில கிறீம் வகைகளில் குறிப்பிட்ட அளவிலும் பார்க்க ஆகக் கூடுதலான இரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த தகவல்களை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தொழிநுட்ப நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சுமார் ஆயிரம் தயாரிப்புக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக சருமத்திற்கு பயன்படுத்தக் கூடிய கிறீம் வகைகளில் இருக்க வேண்டிய ஆகக் கூடிய உலோகத்தின் அளவு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, ஒரு கிலோகிராமில் இருக்கக்கூடிய ஆகக்கூடிய இரசாயனத்தின் அளவு ஒரு மில்லிகிராம் ஆகும்.

இருப்பினும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சருமத்தை அழகுபடுத்துவதற்காக உள்ள கிறீம் வகைகளில் கிலோகிராம் ஒன்றில் 11 ஆயிரம் மில்லி கிராமுக்கும் மேற்பட்ட இரசாயன கலவை அடங்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சருமத்தை அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் கிறீம் வகைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என நுகர்வோர் அதிகாரசபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் மட்டுமல்லாது உலகளாவிய ரீதியில் பெண்கள் தமத அழகை பராமரிக்க பல்வேறு இரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

அவ்வாறு இரசாயன பொருட்களை பயன்படுத்தும் போது அளவுக்கு அதிகமான இரசாயனம் அடங்கிய அழகினை மெருகூட்டும் பொருட்கள் சருமம், கண் உள்ளிட்ட உடலின் பல பாகங்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தப்படலாம் என அழகியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.