ஜித்தாவில் இருக்கும் OIC அமைப்பிற்கும், ரியாத்தில் இருக்கும் GCC அமைப்பிற்கும் மீண்டும் மிப்லால் மௌலவியினால் முறைப்பாட்டு கடிதம் இன்று -19- கையளிக்கப்பட்டது.
அதில் உள்ளடக்கப்பட்டுள்ளவை
ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பின் பிறகு நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் சம்பந்தமாக மே 27 உங்கள் அமைப்பிற்கு கையளிக்கப்பட்ட முறைப்பாடு கடித்ததிற்கு, நீங்கள் நடவடிக்கை எடுத்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து முஸ்லிம்கள் விடயத்தில் அக்கறை செலுத்தியதிற்கு நன்றி
அத்துடன் இன்னும் இது போல சில நெருக்கடிகள் இருக்கிறது. உங்களுடைய பல கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை இலங்கை அரசு பெற்றுக் கொண்டு அரசாங்க தரப்பு இன்னும்
★500 மேற்ப்பட்ட அப்பாவி முஸ்லிம் வாலிபர்களை சந்தேகத்தின் பெயரில் சிறைக் கைதிகளாக வைத்துள்ளனர்.
★ முஸ்லிம் தனியார் சட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
★பெண்களின் ஆடை விடயத்தில் நிகாப்,புர்காவிற்கு நிரந்தர தடை விதிக்க அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பித்து தீர்மானங்கள் எடுக்க எத்தனிக்கிறார்கள்.
இந்த மூன்று விடயங்களையும் உங்கள் கவனத்தில் கொண்டு இந்த விடயங்களில் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு நீதமான முடிவை பெற்றுத்தர உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்
7 கருத்துரைகள்:
பாராட்டுக்கள்
Alhamdulillah.....May Allah Bless your for you work toward our society in needy time.
Great Work...
Mashallah
Alhamtulla
I appreciate YOU.?
அமைப்புகளின் பெயர் போட்டு பட்டம் பதவிக்காக அலையும் ...... முஸ்லிம்கள் மத்தியில் இப்படியும் ஒருவரா பாராட்டுக்கள்
Post a comment