Header Ads



கட்சியொன்று திரட்டிய ஆகக்கூடிய ஜனத்திரளும், குப்பை அள்ளிய எம்பி.யின் முன்மாதிரியும்..!

காலி முகத்திடலில் நிரம்பி வழிந்த மக்கள் வெள்ளம் கலைந்து சென்ற பின்னும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியின் முன்மாதிரியான செயற்பாடு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இலங்கையின் முன்னணிக் கட்சியாக அங்கீகாரம் பெறாத கட்சியொன்றினால் ஒன்றுதிரட்டப்பட்ட ஆகக்கூடிய ஜனத்திரள் நேற்றைய தினம் காலி முகத்திடலில் நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் பொதுச் சம்மேளனக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கூட்ட முடிவில் பொதுமக்கள் கலைந்து சென்ற பின்னர் காலிமுகத்திடலை முற்றாக சுத்தப்படுத்தி கையளிக்கும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவர்களும் களத்தில் இறங்கி காரியமாற்றியுள்ளனர்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க துடைப்பக்கட்டையுடன் கூட்டிப் பெருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பெரும் பாராட்டையும் வரவேற்பையும் பெறத் தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பிக்கான மக்கள் ஆதரவை மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

10 comments:

  1. OUR MUSLIM UMMA WHY NOT SUPPORT THIS TIME FOR JVP, TILL NOW WE SUPPORT OTHER BIG TWO TEAM WHAT THEY DID FOR US AND COUNTRY

    ReplyDelete
  2. whatever done to us by big 2 parties are enough, now it's time to think about the changes.

    ReplyDelete
  3. real hero j.v.p bimal rathnayaka is doing grate work

    ReplyDelete
  4. Yes... Muslims Leaders should think of making agreements with JVP.

    ReplyDelete
  5. JVP யினர் தங்கள் சம்பளம் முழுவதையும் தாங்கள் எடுப்பது இல்லை. JVP யினர் மக்களுக்காக அரசியல் செய்பவர்கள். சஜித் உம் ஓரளவு க்கு அவ்வாறானவர் தான். ஏனையவர்கள் தங்களுக்காக அர‌சிய‌ல் செய்பவர்கள். பெரும் பாலானவர்கள் சுயநல வாதிகள். தமிழர்,முஸ்லிம்களின் பிரச்சினைகளை பாரளுமன்றத்தில் பல தடவைகள் முன் வைத்தவர்கள். எனினும் பொருளாதாரம் தொடர்பாக சிறுபான்மையினரிடம் சிறு அச்சம் உள்ளது. இதனைத் தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் JVP தொடர் பாக சிறுபான்மையினர் நல்ல idea வுடன் இருக்கின்றனர்.

    ReplyDelete
  6. this time why not for JVP.

    ReplyDelete
  7. Our family going to vote jvp. U

    ReplyDelete
  8. அதிகாரத்தை கையில் எடுக்க இவர்கள் குப்பையைக் கையால் எடுத்தால் - நாளை இவர்களும் குப்பையாகி விடுவார்கள் என்பதுவே கடந்தகால யதார்த்தம்.

    காலம்தான் பதில் சொல்ல வேன்டும் - இவர்களும் குப்பையாகிவிடும் அரசியல்வாதிகளா அல்லது குப்பை அரசியலுக்கு குட்பை சொல்லும் அரசியல்வாதிகளா என்று...........

    ReplyDelete
  9. Mr Nebosh

    You are cracking jokes I believe. Do you think that our political traders will support to JVP without any gain and empty handed?? Some time it may happen if you have the practice of daydreaming. I am sure that there are people of your calibre and we can request them to support JVP this time. I am also supportive of your view.

    ReplyDelete
  10. lets go for a change this time in a BIG WAY, VOTE FOR JVP

    ReplyDelete

Powered by Blogger.