Header Ads



கைவிலங்கின்றி பொலிஸ்மா, அதிபருக்கு சிகிச்சை

21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு, கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிரி பெர்னாண்டோவும் கைதாகி விளக்கமறியல் உத்தரவின் கீழ் வைத்தியசாலைகளில்  சிறைக் காவலரகளின் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வறுகின்றனர்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெறும் பொலிஸ் மா அதிபர் பூஜித்துக்கு கட்டில் விலங்கோ, அல்லது கை விலங்கோ இன்று வரை இடப்படவில்லை எனவும், வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய அந் நடவடிக்கைகளை முன்னெடுத்ததாகவும் கொழும்பு விளக்கமறியல் சிறைத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, குறித்த சிகிச்சை அறையில் இருந்து கட்டணம் செலுத்தபப்டும் சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

(எம்.எப்.எம்.பஸீர்)

No comments

Powered by Blogger.