Header Ads



ஈஸ்டர் தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை - அது அரசின் பொறுப்பற்ற தன்மையால் நடந்தது - பேராயர் மல்கம் ரஞ்ஜித்

“முடிவுகளை எடுக்க முடியாத முதுகெலும்பற்ற தலைவர்கள் ஆட்சிப் பொறுப்பை செய்யக் கூடியவர்களிடம் கையளித்துவிட்டு வீடு செல்ல வேண்டும்.”

இவ்வாறு நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் இன்று -21- நடைபெற்ற ஆராதனையின் பின்னர் ஆற்றிய உரையில் கூறினார் பேராயர் மல்கம் ரஞ்ஜித்.

அவர் மேலும் கூறியதாவது ,

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு முஸ்லிம் மக்கள் பொறுப்புக் கூறத் தேவையில்லை.அது அரசின் பொறுப்பற்ற தன்மையால் நடந்தது. உலக நாடுகளின் இருப்புக்காக அவர்களின் சதிகளில் எமது நாடு சிக்கிக் கொண்டது.

புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஆதாரங்கள் இருந்தும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய முடியாமற் போனது.முதுகெலும்பில்லாத தலைவர்கள் இருப்பதே இதற்கு காரணம் .

வழி தவறிய இளைஞர்களை பிடித்துக் கொண்டு சர்வதேச நாடுகள் சில தமது நோக்கை அடைய செய்த சதியின் விளைவே தாக்குதல்.வெளிநாட்டு சக்திகள் இங்கு தலைதூக்க இடமளிக்க முடியாது. நாட்டின் புலனாய்வுத்துறையை அந்த சக்திகளின் சொல்கேட்டே அரசு முடக்கியது. – என்றார் பேராயர்

5 comments:

  1. உன்மையை சொல்லியிருக்கிரார் மதிப்புக்குரிய பேராயர்,ஆனால் பொராமையும்,வஞ்ஞகமும் கொண்ட இனவாதிகலுக்கு இவர் தக்க பதிலடி வழங்கியிருக்கிறார்.

    ReplyDelete
  2. இக்கருத்து மூலம் பேராயர் கண்டியில் வைத்து இழந்த அபிமானத்தை மீள கட்டியெழுப்பி விட்டார். இந்தத் தெளிவில் இருந்து பிறளமாட்டார் என எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. The holy respected Cardinal Malcom Ranjith is always kindhearted, soft minded, speaking well and good, have not double tongues, and maintaining the truthfulness always. His reputation already gone more than the peak of the Himalaya.

    ReplyDelete
  4. இவர் இப்படி சொல்லி சொல்லி பாரிய ஒரு மறைமுக திட்டடத்துடன் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் உண்டு நீர்கொழும்பு முஸ்லிம்கள் இல்லாத பகுதியாக மாற்றப்படணும் என்கிற ஒரு பின்னணியில் செயல்படுகிறார்

    ReplyDelete

Powered by Blogger.