Header Ads



காதி நீதிமன்ற தீர்ப்பில் திருப்தி இல்லாவிட்டால் மேன்முறையீடு செய்யலாம் - ஊடகங்கள் கூறுவது போன்று முஸ்லிம் சட்டத்தில் பிரச்சினையில்லை

பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக சாட்சியில்லாது கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம்களை விடுதலை செய்வது சம்பந்தமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

நேற்று மாலை அலரு மாளிகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் உட்பட புதிய திருத்தங்கள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டதாக அவர் கூறினார். 

எந்தவித சாட்சிகளும் இல்லாத நபர்களை விரைவாக விடுதலை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்ட மா அதிபருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் இதன்போது கூறியுள்ளார். 

முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும், அந்த சட்டத்தில் ஊடகங்களில் தெரிவிக்கப்படுகின்றவாறு பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் கூறினார். 

பாதிக்கப்பட்ட பெண்கள் காதி நீதிமன்ற தீர்ப்பினால் திருப்தியடையாவிட்டால் அவர்கள் அது தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும், காதி நீதிமன்றத்துக்கு குறை கூறுவதால் இதற்கு தீர்வு கிடைக்காது என்றும் அவர் கூறியுள்ளார். 

3 comments:

  1. சரியான சட்டம்,காதி நீதி மன்ர தீர்ப்பு பிடிக்காவிட்டால் மேன்முரையீடு செய்ய சட்டத்தில் இடமுல்லது.ஆனால் இனவாத ஊடகங்கள் எல்லாமே பெரிசாக கான்பிக்கின்ரார்கல்.அனைவரும் உங்கள் பென் பில்லைக்கு கல்வியை வழங்குங்கள்.இருபது வரை திருமணம் முடித்து கொடுக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. jaffna Muslim இணைய சஞ்சிகை இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டம், காதி நீதிமன்ற வரலாறு,காதி நீதி மன்றங்களின் அமைப்பு, சட்டங்கள், ஆளணி, செயற்பாடுகள், மதமாற்றம், கலப்பு திருமணங்கள், மேன்முறையீட்டு வாய்ப்புகள் பற்றி ஒரு கட்டுரை வெளியிடுவது நன்று.

    ReplyDelete
  3. பெண்களுக்கான கல்வி மிக மிக முக்கியமானது. பள்ளிக் கல்வி அல்லது மதரசா (அரபுக்) கல்வியுடன் சேர்ந்த பள்ளிக் கல்வி பெண்களுக்கு மிக மிக முக்கியம் அத்துடன் பெண்களுக்கான தொழிற்றுறையில் ஈடுபடக்கூடிய கல்வித்திட்டங்களும் மிக முக்கியமானது. எங்களது ஊர்களில் குழுக்களாகச் சேர்ந்து இந்த நிகழ்சசித் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம். இதற்கான நிதிகளைத் திரட்ட பல்வேறு வழிகள் இருக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்னர் சட்டத்தரணி சறூக் அவர்களின் “சட்டத்தரணி சறூக் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்” என்ற விடயதானத்தைப் Jaffna Muslim ல் பார்த்தேன். மிக மிக கவலைக்குரிய விடயம். எங்களவர்கள் இப்படியும் தொல்லைகளுக்கு உடபடுத்தப்படுகின்றமை மிகவும் ஏக்கத்திக்குரியதாகும். சறூக் அவர்களுடன் வேறு பல சட்டத்தரணிகளும் இந்த விடயத்தில் மிகவும் கடுமையாக உழைத்து வருகின்றனர் என்பது எமக்குத் தெரியாதனவல்ல. இருப்பினும் இப்படியான விடயங்களை முஜிப் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் தேவைப்பட்டால் ஏனைய மிதவாத வேற்றுமத அரசியலாளர்களுடன் சேர்ந்து அரசுக்கு எடுத்துரைத்து சம்பந்தப்பட்ட சந்தேக சிறைவாசிகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க மற்றும் அநியாயமான தொல்லைகளைத் தவிர்க்க உதவுதல் மிகவும் இன்றியமையாதது.

    ReplyDelete

Powered by Blogger.