Header Ads



நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட, ஆலோசகராக திலான் சமரவீர


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலான் சமரவீர, நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள  நியூசிலாந்து அணி விளையாடவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக திலான் சமரவீர, துடுப்பாட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த டெஸ்ட் தொடரானது அடுத்த மாதம் 14ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான ஆரம்பமாக இலங்கைக்கும், நியூசிலாந்துக்கும் இத்தொடர் அமையவுள்ளது.

No comments

Powered by Blogger.