July 13, 2019

சம்பந்தனும், அநுரகுமாரவும் அமைச்சர்களாவார்களா...?

தமிழ் மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சாங்­கத்­தால் இது­வ­ரையில் தீர்வு பெற்றுக் கொடுக்­க­வில்லை என்று  குறிப்­பிடும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் தொடர்ந்து  ஐக்­கிய தேசிய கட்­சி­யைப்   பாது­காத்து  தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைக்­கின்­றது. 

எதிர்த் தரப்­பி­ன­ராக  இருந்து கொண்டு  கூட்­ட­மைப்­பி­னரும்,  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­யாக செயற்­ப­டு­வதை விட  அமைச்சுப் பத­வி­களை பெற்றுக் கொள்­வதே பொருத்­த­மா­ன­தாக அமையும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர்   செஹான் சேம­சிங்க தெரி­வித்தார்.

பொது­ஜன பெர­மு­னவின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் நேற்று  வெள்­ளிக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு  கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் அர­சாங்­கத்­துக்கு எதி­ராக கொண்டு வந்த நம்­பிக்கை­யில்லா பிரேரணை தோல்­வி­ய­டைந்­துள்­ளமை ஆச்­ச­ரி­யப்­படும் ஒரு விட­ய­மல்ல.  

ஏப்ரல்  21  குண்டுத் தாக்­கு­தலைத் தொடர்ந்து அடிப்­ப­டை­வாத குற்­றச்­சாட்­டு­களை முன்­னி­லைப்­ப­டுத்தி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனுக்கு எதி­ராக  எதி­ர­ணி­யினர் பாரா­ளு­மன்­ற­ததில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையைக் கொண்டு  வந்து    அது  விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்ளும் திக­தி யும்   தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.

முன்னாள் அமைச்சர் ரிஷாத் ­ப­தி­யு­தீ­னுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்டு  வாக்­கெ­டுப்­புக்கு எடுத்துக் கொண்­டி ருந்தால் நிச்­சயம்  பிரே­ரணை வெற்றி பெறும் என்­பதை அர­சாங்கம் நன்கு அறிந்­தி­ருந்­தது.   அர­சாங்­கத்தைப்  பாது­ 

காக்க  பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க   மக்கள் விடு­தலை முண்­ணயின் ஊடாக அர­சாங்­கத்­துக்கு எதி­ராக  நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை  கொண்டு வரு­வ­தற்கு அர­சியல்   திட்­டங்­களை முறை­யாக  வகுத்தார்.

மக்­கள் விடு­தலை முன்­னணி அர­சாங்­கத்­ திற்கு எதி­ராக   கொண்டு வந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  தோல்­வி­ய­டையும் என்று நன்கு  அறிந்தும்  எதிர்க்­கட்­சி­யினர் என்ற ரீதியில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான ஒரு பிரே­ர­ணைக்கு  ஆத­ர­வாக  வாக்­க­ளித்து எதிர்க்­கட்­சியின்  கட­மை­யை முழு­மைப் 

ப­டுத்­தி­யுள்ளோம். எதிர்க் ­கட்சித் தலை­வ­ராலே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை  தோல்­வி­ய­டைந்­தது என்று  எவ­ராலும் குறிப்­பிட முடி­யாது.  பிரே­ர­ணையை  வெற்றி கொள்­வ­தற்­கான எவ்­வித  முயற்­சி­க­ளையும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் மேற்­கொள்­ள­வில்லை. இவர்­களின் நோக்கம்  அர­சாங்­கத்தைப் பாது­காப்­பதி­லேயே முழு­மை­யாகத் தங்­கி­யி­ருந்­தது.

தமிழ்  மக்­களின்  அடிப்­படைப்  பிரச்­சி­னை­ க­ளுக்கு  அர­சாங்கம் இது­வ­ரையில் எவ்­வித தீர்­வையும் பெற்றுக் கொடுக்­க­வில்லை  என்று  குற்­றஞ்­சாட்டும் கூட்­ட­மைப்­பினர் தொடர்ந்து   ஐக்­கிய தேசிய கட்­சியை   பாது­காப்­பதால் எவ்­வித  பயனும் ஏற்­ப­டாது. வடக்கு மற்றும் கிழக்கு   பிர­தே­சங்­களில் உள்ள  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு   காணும் நோக்கம் கூட்­ட­மைப்­பி­ன­ரிடம் கிடை­யாது. எதிர்க்­கட்­சி­யினர் என்று குறிப்­பிட்டுக் கொண்டு கடந்த    நான்கு  வருட கால­மாக அர­சாங்­கத்தின் அனைத்து வரப்­பி­ர­சா­தங்­க­ளையும் இவர்கள் பெற்று தமிழ் மக்­க­ளுக்கு துரோ­க­மி­ழைத்­துள்­ளார்கள்.

ஐக்­கிய தேசிய கட்­சி­க்கு கூட்­ட­மைப்­பி­னரும்,  மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யி­னரும்  தொடர்ந்து  ஆதரவு வழங்குவது அவர்க ளின் தனிப்பட்ட தீர்மானமாகும். எதிர்க்கட்சியினர் என்று   குறிப்பிட்டுக்  கொள்வதால்  பதவி நிலையின் பொறுப்புகள் அவமதிக் கப்படுகின்றன. 

ஆகவே  இவ்விரு தரப்பினரும் குறுகிய காலத்துக்கு  அரசாங்கத்தின்  அமைச்சுப் பதவிகளை பெற்றுக்   கொண்டு முழுமை யாக  அரசாங்கத்துக்கு  சார்பாகவே  செயற் படலாம். அதுவே  சிறப்பாக அமையும் என்றார்.

1 கருத்துரைகள்:

அரசியல்வாதிகளுக்கே அமைச்சுப் பதவிகள் தேவைப்படலாம். அதுவே சிலவேளைகளில் அவர்களது வாழ்வாதாரமாகவும் இருக்கலாம். சம்பந்தர் சேரைப் போன்ற அரசியல்ஞானிகளுக்கு அமைச்சுப் பதவிகள் எதற்கு? சொற்ப பணத்திற்காக தமது கொள்கைகளை மாற்றி தனது இனத்தையே காட்டிக் கொடுத்து சோரம்போகும் அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே சம்பந்தர் சேர் அவர்களும் அவர்தம் சகாக்களும் அரசியலில் மிளிர்ந்து நிற்கின்றனர். அவர்களது மாவட்ட மக்களுக்கும் இது பெருமை.

Post a comment